பக்கம்:மின்னொளி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

செல்ல:- இல்லை.

மின்னொளி:உட்காருங்களேன்.உங்களிடம் ஒன்று சொல்ல நினைத்தேன்.

செல்ல:- என்ன?

மின்னொளி:- மக்களுக்கு உழைக்க வேண்டும் , கிராம முன்னேற்றத்திற்கு பணிபுரிய வேண்டும் என்ற பொதுநல உணர்ச்சி உங்களிடம் பொருந்தியிருக்கிறது.

செல்ல:- (புன்னகையோடு)அப்படி ஒன்றுமில்லையே!

மின்னொளி:- அறிவை வளர்ப்பது ஆசிரியர் கடமை. ஊருக்குழைக்கும் உத்தமப் பண்பையும் பெற்றிருக்கிறீர்கள்.இதை எல்லாரிடமும் காணமுடியாது.

செல்ல:-அத்தகைய பெருஞ்செயல் ஒன்றையும் நான் செய்து விட வில்லையே.

மின்னொளி:- நீங்கள் சொல்லுகிறீர்கள்.இந்த ஊரில் சுகாதார வாரம் நடத்தும் துணிவு இதுவரை எந்த ஆசிரியருக்கும் வந்ததில்லை.அவ்வளவு பயம்.அந்த ஒரு தொண்டுக்காக நான் உங்களை மனமாரப் பாராட்டுகிறேன்.

செல்ல;-ஒரு சிறிய கடமை.அதற்கு இவ்வளவு பெரிய பாராட்டு?

மின்னொளி:- ஆலம் விதை சிறியதுதுதான் அது முளைத்து பலன் தரும்போது எவ்வளவு பெரிது?

செல்ல:-இம்மாதிரி நிலத்தில் அதை வளரவிட வேண்டுமே மற்றவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னொளி.pdf/14&oldid=1412710" இலிருந்து மீள்விக்கப்பட்டது