பக்கம்:மின்னொளி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நாடகம்

மின்னொளி:- விதைத்தவர் வேலி போடவேண்டும். அறிந்து செயலாற்றுங்கள். மற்றவர்கள் எப் படியோ, உங்கள் அறிவுப்பணியின் அவசி யத்தை நான் உணர்கிறேன். முடிந்தவரை ஒத் துழைக்கவும் விரும்புகிறேன்.

செல்ல :- மிக்க நன்றி.

மின்னொளி :- அன்று, உங்களைக் கண்டபொழுதே என் உள்ளத்தில் ஏதோ ஒரு நம்பிக்கை பிறந் தது. அது நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே வருகிறது.

(வயிர முத்து வருகிறான் வெளியினின்றும் அழைக்கிறான்)

வயிர :- மின்னொளி !

மின்னொளி :- யாரது ?

வயிர :- நாந்தான் அத்தை மகன் வயிரமுத்து,

(உள்ளே வந்தவன் செல்லத்துரையைக் கண்டு ஓ வாத் தியாரா? மின்னொளி மாமா எங்கே?

மின்னொளி :- (வெறுப்பாக வெளியே போயிருக்கிறார்).

வயிர :- வாத்தியாரே! தனியா இருக்கிற பொம்பளைக் கிட்டே ஒனக்கு என்ன பேச்சு?

செல்ல :- மணியக்காரரைப் பார்க்க வந்தேன்.

வயிர :- அவர்தான் இல்லையே. போகவேண்டியது தானே?

செல்ல :- (அஞ்சி) நான் வித்தியாசமாக ஒன்றும் பேசவில்லை ஐயா!

13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னொளி.pdf/15&oldid=1412832" இலிருந்து மீள்விக்கப்பட்டது