பக்கம்:மின்னொளி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மின்னொளி

வயிர : (கடுப்பாக) அது எனக்குத் தெரியாது. இந்த மாதிரி இன்னொரு தரம் பார்த்தேன், நான் பொல்லாதவன்!

செல்ல :- நல்லது, நான் வருகிறேன். (செல்லத்துரை போகிறான்.)

வயிர :- மின்னொளி இது நல்லால்லே. மாமாகிட்டே சொன் னா, என்ன ஆவுந் தெரியுமா?


மின்னொளி :-ஆவதையும் போவதையும் அப்புறம் பார்த்துக்கொள்வோம். இப்போ, தனியாக இருக்கிற பெண்ணிடம் உனக்கென்ன பேச்சு? போ வெளியே!

வயிர :- என்னையா? ஒன் அத்தை மகனையா?

மின்னுெளி :- ஆமாம்.

வயிர :- அப்படியா சங்கதி? உம், சரி, நான் பாத்துக்கிறேன்.

(கருவிக்கொண்டே போகிறான்.)

நான்காம் காட்சி.

(இருளன் பூசாரி வீடு. உடைந்த நாற்காலியில் உட்கார் ந்து ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறார் செல்லத்துரை, ஒரு நோயாளி வருகிறான்.)

நோயாளி :- இருமிக்கொண்டே தம்பி பூசாரி ஊட்லே இருக்கிறாருங்களா?

செல்ல :- இல்லையே, வெளியே போயிருக்கிறார்.என்ன சங்கதி?

நோயாளி :- குளுரும், காய்ச்சலும் வந்து, பத்து

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னொளி.pdf/16&oldid=1412833" இலிருந்து மீள்விக்கப்பட்டது