பக்கம்:மின்னொளி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நாடகம்

நாளா கொல்லுதுங்க. பூசாரி துருநீறு குடுத்தா நல்லாப் பூடுன்னுங்க அதுக்காவத்தான் வந் கேன் கையோட ரெண்டு பணமும் கொண் டாந்தேனுங்க.

செல்ல :- ஐயா! நான் சொல்வதைக் கேட்பீரா?

நோயாளி :- நல்லதுன்னா தட்டாமெ கேப்பேனுங்க.

செல்ல :- உமக்கிருப்பது மலேரியா காய்ச்சல். இதற் குக் கைகண்ட மருந்து கொயினா. பக்கத்தூர் தபால் ஆபீசிலே கிடைக்கும். போய் வாங்கிச் சாப்பிடும், நிச்சயம் குணமாகும். ஏய்யா! மந் திரத்திலே எங்காவது மாங்காய் விழுமா?

நோயாளி : உம்.நெசம்மாவா? நல்லா ஆகுமா? மருந்தா சாப்பிடச் சொல் றீங்க?

செல்ல :- ஆமய்யா. மருந்துதான் நோய் தீர்க்கும்.மந்திரமும் மாயமுமல்ல.

நோயாளி : நல்ல துங்க. நீங்க மகராசரா இருக்கணும்.

(இருமியவண்ணம் போகிறான்.)

ஐந்தாம் காட்சி.

(பொன்னப்பர் வீடு மாதம் புரட்டாசி. எனவே அலமாரி, பீரோ, பெட்டி, வாசற் கதவுகளுக்குப் பட்டை நாமம் தீட்டிக்கொண்டிருக்கிறார் பொன்னப்பர். வயிரமுத்து வருகிறான்)

பொன் :- வாப்பா மத்தியானம் சாப்பிட ஏன் வல்லே? எவ்வளவு நேரம் காத்திருந்தேன்? எங்கே போயிட்டே?

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னொளி.pdf/17&oldid=1412834" இலிருந்து மீள்விக்கப்பட்டது