பக்கம்:மின்னொளி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மின்னொளி

வயிர:- சுப்பண்ணந் தோட்டத்திலே மினியப்பனுக்குப் பொங்கல் வச்சாங்களாம். சாப்பிடக் கூப்பிட்டாங்க, போயிருந்தேன்.

பொன் . சொல்லவேண்டாம்? இதுதான் பொறுப்பில்லாத்தனம். எதுக்கும் ஒரு ஒழுங்குமுறை தெரியணும்ப்பா.

வயிர - அது மொதல்லே, ஒங்க மின்னொளிக்குத் தெரியட்டும்.

பொன் :- மின்னொளி அப்படி என்னப்பா ஒழுங்கு தவறி நடந்திட்டா?

வயிர :- காலம்பர நான் இங்கே வந்தபோது, அந்த வாத்தியாருப் பயலோட கொஞ்சிக் கொஞ்சி பேசிட்டிருந்தாளே. இருக்கலாமா? ஒழுங்கு தானா ?

பொன் :- (வியந்து) யாரு செல்லத்துரையோடா? இருக்காதே,

வயிர :- அப்படின்னு, நான் பொய் சொல்றேன: கூப்பிட்டுத்தான் கேளுங்களேன் மின்னொளியை.

பொன் :- (உரக்க) மின்னொளி மின்னொளி !

மின்னொளி := (உள்ளிருந்த வண்ணம்) ஏம்ப்பா இதோ வந்தேன் ..... (கூடத்திற்கு வந்து) ஏன்?

பொன் : (கடுமையாக) காலம்பர செல்லத்துரை இங்கே வந் திருந்தானா?

மின்னொளி :- வந்திருந்தார்.

பொன் :- எதுக்கு வந்தான்?

மின்னொளி :- உங்களைப் பார்க்க.

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னொளி.pdf/18&oldid=1412849" இலிருந்து மீள்விக்கப்பட்டது