பக்கம்:மின்னொளி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

னமோ ஒரு மாதிரியா ஆசை வச்சிருக்கான்னு தெரியுது.

பொன் :- எப்படி?

வயிர:- அப்படித்தான். என்னைக் கண்டா கொஞ் சங்கூடப் பிடிக்கலையே. நாளைக்கு வாழப் போறது யாருகிட்டே?

பொன் :- இதபாரு, அதைப்பத்தி நீயேன் கவலைப்பட்றே? என் தங்கச்சி சாவும்போது, நான் செஞ்சி குடுத்த சத்தியத்தை மறக்கமாட்டேன். என்னைக்கிருந்தாலும் மின்னொளி ஒன்னோட பெண்டாட்டி. சந்தேகமே வேணாம்ப்பா.

வயிர - அதுதானே கேட்டேன்!

(இருளன் பூசாரி வருகிறான்.)

பொன் :- வா பூசாரி வா என்ன சங்கதி?

இருளன் :- என்னங்க இப்படிக் கேக்கிறீங்க? கவ னமே இல்லீங்களா? வர்ற செவ்வாக்கெழமை காளியம்மன் பண்டிகைக்கு கம்பம் போட்ற நாளாச்சுங்களே.

பொன் :- அதுக்கென்ன, வழக்கம்போலச் செய்ய வேண்டியதுதானே.

இருளன் :- என்னமோ, ஆயா காரியத்தை சிறப்பா செஞ்சம்னாதான் ஊருக்கு சேமம். மழை மாசி யாவது ஒழுங்காப் பெய்யும். ஒங்களுக்குத் தெரி யாத விஷயங்களா?

பொன் :- ஒம் மனம்போல செஞ்சிடலாம் போ!

(இருளன் போகிறான்.)

18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னொளி.pdf/20&oldid=1412855" இலிருந்து மீள்விக்கப்பட்டது