பக்கம்:மின்னொளி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நாடகம்

ஆறாம் காட்சி.

இருளன் வீடு. 'திருக்குறள் இசைப்பாடல்' புத்தகம் கையில் வைத்து பார்த்துக்கொண்டிருக்கிறாள் சடைச்சி. அதிலுள்ள பாட்டொன்றைப் பாடுகிறார் செல்லத்துரை.)

சடை - வாத்தியாரே! இது இருக்கட்டும். எங்கப் பன் ஒங்கமேலே ரொம்பக் கோவமாருக்காரே, தெரியுமா?

செல்ல :- தெரியாதே. காரணம்?

சடை :- அவுரு தொழிலைக் கெடுத்தீங்களாமே?

செல்ல :- இதென்ன விபரீதம்? அவருக்கெதிராக நான் ஒன்றும் செய்யவில்லையே!

சடை :- நீங்க மத்தவங்களுக்கு செஞ்ச நல்லது,அவுருக்குக் கெடுதலா முடிஞ்சிருந்தா?

செல்ல :- எப்படி?

சடை :- இந்த ஊரிலே, பேயி, பிசாசு, நோவு, நொடி எது வந்தாலும் எங்கப்பனோட திருநீறு தான் மருந்து. மந்திரிச்சிக் குடுப்பாரு. ஏதோ மாசம் அஞ்சு பத்து கெடைக்கும். நீங்க மந்தி ரத்திலே மாங்கா உழுகாது, வைத்தியம் பாருங் கோன்னு சொல்லப்போயி, எல்லாரும் மருந்து சாப்பிட ஆரம்பிச்சிட்டாங்களாமே.

செல்ல :- நோய்க்கு மருந்து சொல்வது தவறா? இதுவா நான் செய்த குற்றம்?

(ஆத்திரத்தோடு வருகிறான் இருளன்.)

19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னொளி.pdf/21&oldid=1412856" இலிருந்து மீள்விக்கப்பட்டது