பக்கம்:மின்னொளி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நாடகம்

ஏழாம் காட்சி.

( ஏரிக்கரை. அறுத்த புல்லும், அரிவாளும் கிடக்கின் றன. சடைச்சியும் மின்னொளியும் நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.)

மின்னொளி :- இந்த அற்ப விஷயத்துக்காகவா அவ் வளவு கோபித்துக்கொண்டார் வாத்தியார் சொன்னதில் என்ன தவறு?

சடை : நமக்குத் தெரியலே. அவருக்கு வருமா னம் போச்சேங்கிறாரு. (பரிவோடு) அம்மா! அவரைத் திட்டினபோது, எம்மனசு என்னபாடு. பட்டுது தெரியுமா?

மின்னொளி - நீ தடுக்கவில்லையா? சடை : தடுத்திருந்தா எந்தோலை உரிச்சிருப்பாரே!எங்கப்பன் சங்கதி ஒங்களுக்குத் தெரியாது?

மின்னொளி:- (வருந்தி), சடைச்சி அவர் நிலையை நினை த் தால் என் மனம் மிக வருந்துகிறது. இருளடைந்து கிடக்கும் கிராமத்தில் அறிவொளி பரப்புவது குற்றமா? மூட நம்பிக்கைகளை முறியடித்து, நாகரிக வாழ்வுக்கு நம்மை இட்டுச்செல்பவருக்கா இவ்வளவு கஷ்டங்கள்?

சடை - வயிரமுத்து, எங்கப்பனுக்கு நல்லா உருவேத்தியிருக்கிறான்!

மின்னொளி:- அந்த ஊர்சுத்தியால்தான் எங்கப்பா வின் ஆதரவை அவர் இழந்தார். இப்பொழுது உன் தந்தையிடமும் கோள் சொல்லிக் கலகம் மூட்டிவிட்டான். இந்தப் பட்டிக்காட்டில் இனி அவருக்குச் சாப்பிடவும் இருக்கவும்.

21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னொளி.pdf/23&oldid=1412879" இலிருந்து மீள்விக்கப்பட்டது