பக்கம்:மின்னொளி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மின்னொளி

சடை :- கஷ்டந் தான். இருந்தாலும், எங்கப்பனுக்குத் தெரியாமலாவது அவருக்கு வேண்டிய செளகரியத்தைச் செய்து தரணும் பாவம்! அவர் ரொம்ப நல்லவரும்மா... அதோ, அவரே வாராரு (செல்லத்துரை வருகிறார்)

மின்னொளி - வாருங்கள். உங்களைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்.

செல்ல : இந்த ஏரிக்கரையில் நின்று கொண்டு, மீன் உற்பத்தி பற்றிப் பேசினாலும் பயன் உண்டு. என்னைப் பற்றிப் பேசுவதில் என்ன புண்ணியம்?

மின்னொளி:- பயனை எதிர்பார்த்து இதயத்தில் அன்பு மலர்வதில்லேயே,

செல்ல :- அன்பு என்ற சொல்லுக்கு, இந்த ஊரில் கொடுமை என்பதுதான் சரியான பொருள்.


மின்னொளி :- வெறி நாயின் செயலுக்கு ஆடுகள் பொறுப்பல்லவே! 

செல்ல :- பிறந்த இடத்துப் பாசம். இந்த மண்வாசம் எங்கே போகும்? பேசுகிறாய் -

மின்னொளி :- மத வெறியும், மடமையும் மண்டிக்கிடக் கும் இந்தப் பாழுரிலும், உங்களுக்காகக் கண் ணீர் சிந்த ஒருத்தி இருக்கிறாள் என்பதைமட்டும் மறந்துவிடாதீர்கள.

சடை:- சரி, நீங்க பேசிக்கிட்டிருங்க, நாம் போயிட்டு வர்றேன். -

செல்ல :- எங்கே போகிறாய்? சடைச்சி! அப்பா பிறகு ஒன்றும் திட்டவில்லேயே?

22.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னொளி.pdf/24&oldid=1412887" இலிருந்து மீள்விக்கப்பட்டது