பக்கம்:மின்னொளி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மின்னொளி

மின்னொளி:- (வருந்தி) ஐயோ! அதைச் சொல்லத் தான் நினைத்தேன். என் மனம் வேகிறது. அவனை மனப்பதைவிட கல்லைக் கட்டிக் கொண்டு இந்த ஏரியில் விழுவதுமேல்.

செல்ல :- தற்கொலை பாபமாயிற்றே.

மின்னொளி:- அந்தக் குடிகாரனை மனப்பதைவிடவா?

செல்ல :- வேண்டாம் மின்னொளி அப்பாவின் மனதை மாற்ற முயலு.

மின்னொளி:- நாய் வாலையாவது நிமிர்த்தலாம். அது முடியாது. அப்பாவின் பிடிவாதம் அவ்வளவு கோணலாயிற்றே!

செல்ல :- வேறு வழியில்லையா?

மின்னொளி :- எனக்கு வேறு யார் இருக்கிறார்கள்? நீங்கள்தான் சொல்லவேண்டும்.

செல்ல :- (வியந்து) நானா?

மின்னொளி, ஆம். என் வாழ்வும் தாழ்வும், உங்கள் கையில் தானிருக்கின்றன.

செல்ல :- நான் ஏழை; தாங்கமாட்டேன் மின்னொளி

மின்னொளி: உங்கள் அன்பிலும் பலத்திலும், எனக்கு அசையாத நம்பிக்கையுண்டு.

(தொலைவில் ஓர் எருமைக்கன்றோடு, நான்கு பேர் தோன்றுகின்றனர்)

செல்ல :- (அச்சத்தோடு) அதோ யாரோ நம்மை நோக்கி... பார்த்தாயா?........

மின்னொளி:- பயப்படாதீர்கள். தமது பண்ணையாட் கள். நாளை மறுநாள்.ஓங்காளிக்குப் பலிபூசைக் காக எருமைக்கடா கொண்டுபோகிறார்கள்.

24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னொளி.pdf/26&oldid=1412890" இலிருந்து மீள்விக்கப்பட்டது