பக்கம்:மின்னொளி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நாடகம்

லும், நாம்ப அரசாங்க உத்தரவை மீறக்கூடாது.

இருளன் :- அப்படியானா பண்டிகை?

பொன் :- நிறுத்துவமா! சக்கரைப் பொங்கலோடவாவது சரிப்படுத்த வேண்டியதுதான்.

இருளன் :- (கைகளைப் பிசைந்து) ஐயோ! காளியாயி....நாங்க என்னம்மா குத்தம் பண்ணினோம்?

வயிர:- பூசாரி பொலம்பாதே. என்ன செய்யறது!

ஒன்பதாம் காட்சி.

(இருளன் வீடு. புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறாள் சடைச்சி. இருளன் வருகிறான். துணியில் கட்டி வந்த பழம் தேங்காய் பிரசாதங்களைச் சலிப்போடு கட்டில் மேல் போடுகிறான்.)

சடை - அப்பா ஊரிலே எங்கே பார்த்தாலும் அம்மை வந்திருக்காப்லே இருக்குதே!

இருளன் :- அதை ஏங் கேக்கறெ போ......

சபை - மணியக்காரர் மக, மின்னொளிக்குக்கூட வந்திருக்குதாமே?

இருளன் - ஏன் வாக்காது? அம்மை மாத்திரமா வாக்கும்? வாந்திபேதிகூட வந்து வாரிகிட்டுப் போவும்,

சடை:- ஏம்ப்பா அப்படிச் சொல்றே?

இருளன் :- ஆயாளோட பலிபூசை நின்னுது; வந்தது ஊருக்கே அனர்த்தம்! தெரியாமையா பெரிய வங்க பரம்பரையா பண்ணிகிட்டு வந்தாங்க?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னொளி.pdf/29&oldid=1412894" இலிருந்து மீள்விக்கப்பட்டது