பக்கம்:மின்னொளி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மின்னொளி

சடை: - கடவுள் கருணையே உருவானவர்னு சொல்வாங்களே. ஓங்காளி அவ்வளவு கொடுமைக்காரியா அப்பா, ஊரையே கெடுக்க?

இருளன்:- ஏது? ஒங்கிட்டேயும் வாத்தியாரு வாசம் அடிக்கிறாப்ல இருக்குதே! இதெல்லாம் உனக்கென்ன தெரியும்? போய் ஒன் வேலையைப்பார்.

(சடைச்சி போக, வயிரமுத்து வருகிறான்.)

வயிர:- ரொம்ப கோவம் போலேருக்குது பூசாரிக்கு! யாருமேலே?

இருளன்:- அதை ஏங் கேக்கறே போ. அந்த வாத்தியாரு வந்தாலும் வந்தான், ஊரையே கெடுத்திட்டான். நம்ம வரும்படியிலும் மண்ணு உழுந்தது. வர்ற கோவத்துக்கு, அவனை என்ன பண்ணனுந் தெரியுமா?

வயிர:-எனக்கும் அப்படித்தான் இருக்குது. யாரைத்தான் மிச்சத்திலே உட்டான்? பூசாரி ஒரு வேலை செய்வோமா?

இருளன்:- என்ன?

வயிர:- (மெதுவாக) நீ பக்கபலமா இருக்கறதான, அவனை ஒழிச்சே கட்டிடறேன். என்ன சொல்றே?

இருளன்:- வழி?

வயிர:- எல்லாம் இருக்குது. நான் செய்யறேன்.

இருளன்:- செய்யப்பா ஊரைப் புடிச்ச சனியனாவது ஒழியட்டும்.

(அடுத்த அறையில் பாத்திரம் விழுகிற சப்தம்)


28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னொளி.pdf/30&oldid=1412959" இலிருந்து மீள்விக்கப்பட்டது