பக்கம்:மின்னொளி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நாடகம்

சடைச்சிக்குத்தான் பாவம், ஒரு காலு வெந்து கருகிப்போச்சு.

மின்னொளி :- சடைச்சிக்கா? ஐயோ!... தங்கமான பெண்ணாயிற்றே! அவளுக்கா?...

பொன் :- யாரு செஞ்ச அயோக்யத்தனம்டா இது? எங்கட்டிடமா எரிஞ்சிது? என்னடாஅநியாயம்? கேள்வி முறை இல்லியா?

ஆள் :- ஆருக்கு தெரியுங்க செஞ்சது யாருன்னு?

பொன் :- (வருந்தி) நானூறு செலவு பண்ணிக் கட்டி முடிச்சேன். வரு ஷ ங் கூட ட_ஆவுலே, இந்த கதியா வரணும்? காளி ஒன்னை மலையா நம்பி யிருந்தேனே! சொத்தெல்லாம் போயி, கடன் தொல்லை மென்னியைப் பிடிக்கற வேளையிலே கஷ்டத்துக்குமேலே கஷ்டமா?

(தலையைப் பிடித்துக்கொண்டு உட்காருகிறார்)

பதினோராம் காட்சி.

(இருளன் பூசாரி வீடு. "ஐயோ, அப்பா" என்று முறுகிக் கொண்டு படுக்கையில் கிடக்கிறாள் சடைச்சி. இருள னும், வயிரமுத்தும் அவளது வெந்த காலில் கட்டுப் போட்டு முடிக்கின்றனர்.)

வயிர :- இப்படி நடக்கும்னு நான் நெனக்கவே யில்லே. புலி மேலே வீசின கத்தி, புள்ளிமானை யல்ல காலை வெட்டிபிட்டுது. .

இருளன் :- (வெறுப்போடு) எனக்கு நல்லா வேணும். வயிரமுத்து கெடுவான் கேடு நினைப்பான்கிறது சரியா நடந்திட்டுது.

31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னொளி.pdf/33&oldid=1412917" இலிருந்து மீள்விக்கப்பட்டது