பக்கம்:மின்னொளி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மின்னொளி

இருளன் :- பள்ளிக்கூடத்தோட ஒங்களைப் பொசுக்க ஏற்பாடு பண்ணினோம், நானும் வயிரமுத்தும். நாங்க பண்ணின சதியிலேருந்து ஒங்களைக் காப்பாத்த பள்ளிக்கூடம் வந்திருக்கிறா சடை ச்சி. அப்ப நீங்க இல்லே, கதவைச் சாத்தி நெருப்பை வச்சிட்டான் வயிரமுத்து.

செல்ல :- ஆ! என்ன பயங்கரமான சதி.நான் செய்த தவறென்ன? நான் அவ்வளவு கொடியவனா ? நான் அழிக்கப்படவேண்டியவனா? என்னைக் கொல்லவும் துணிந்தீர்களா?

இருளன் :- தப்பு. அதனாலதான் அதுக்கேத்த தண்டனையை காளியே எனக்குக் குடுத்துட்டா. ஒங்க கிட்டேதான் நியாயம் இருக்குதுன்னு கண்ணுக்கு மெய்யா தெரிஞ்சிகிட்டேன். நான் ரொம்ப கேட்டுக்கிறேன், நடந்ததை யெல்லாம் மறந்துடுங்க. வாத்தியாரே! இனிமே ஒங்க சொல்லைத் தட்டவேமாட்டேன். நீங்கதான். எனக்குத் தெய்வம்.

செல்ல :- ஆஃகா "சீர்திருத்தம் ஒரு நெருப்பு விளையாட்டு" என்பது மெய்யாகிவிட்டதே!

(சடைச்சியின் காலைப் பார்க்கிறான்.)

பனிரெண்டாம் காட்சி.

(பொன்னப்பர் வீடு. படுக்கையில் மின்னொளி. அருகே

சோர்வுடன் வீற்றிருக்கிறார் பொன்னப்பர். வயிர முத்து வருகிறான்.)

வயிர:- (மிடுக்காக) மாமா இவுரு வெளியூர் பயணம்.

பொன் :- ஏம்ப்பா?

34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னொளி.pdf/36&oldid=1412920" இலிருந்து மீள்விக்கப்பட்டது