பக்கம்:மின்னொளி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நாடகம்

வயிர :- இந்த ஊரே எனக்குப் பிடிக்கலே.

பொன் :- நாங்களெல்லாம் இருக்கிறமே?.

வயிர :- நீங்க இருக்கிறீங்க, எச்செலையும் காக்கா யும் மாதிரி இங்கே என்னருக்குது? ஒரு ரயிலா, மோட்டாரா, பணமா, காசா, தொழில் தொம் பாரமா? சிங்கப்பூருக்கு போறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

பொன் :- சிங்கப்பூருக்கா? எதுக்கு?

வயிர :- என்னமாவது தொழில் பண்ணிகிட்டு, அங்கேயே ஜாலியா இருந்திடப் போறேன்.

பொன் :- (வியந்து) என்னப்பாது? ஒனக்கு ஆக வேண்டிய காரியம் எவ்வளவோ இருக்குது. இப் படிச் சொல்றியே, ஊம்...?

வயிர:- என்ன காரியம்? கல்யாணந்தானே?

பொன் :- ஆமாப்பா அடுத்த மாசம் நல்ல முகூர்த்தம் வருது. நீயென்னடான்னா ?

வயிர :- வந்தென்ன பண்றது? நாங் கல்யாணம பண்ணிக்கப்போறதில்லே. பண்ணிகிட்டாலும், கண்டிப்பா மின்னொளியை பண்ணிக்கப் போறதே இல்லே.

பொன் :- ஏம்ப்பா? காரணம்? மின்னொளிக்குப் புரு ஷன் நீ தாங்கறது முடிஞ்சுபோன விஷய மாச்சே!... இனிமே மாத்தமுடியுமா?

வயிர :- நானும் அப்படித்தான் நெனச்சி, ஆசை யா இருந்தேன். பொண்ணும் நல்ல அழகான பொண்ணு, சொத்து சொதந்தரத்தோட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னொளி.pdf/37&oldid=1412921" இலிருந்து மீள்விக்கப்பட்டது