பக்கம்:மின்னொளி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மின்னொளி

கெடைக்கும்னு இப்பத்தான் ரெண்டும் இல் லியே. இனிமே கரும்பை நெனச்சு கிட்டு சக் கையை மென்னாத்தான்.

பொன் : (அஞ்சி) வயிரமுத்து என்னப்பா சொல்றே நீ? மின்னோளிக்கு என்ன குறை?

வயிர :- அம்மை வாத்து இவளோட அழகெல்லாம் அள்ளிகிட்டுப் போயிடிச்சி. கடன் வந்து ஒங்க சொத்தெல்லாம் சொழட்டிப் புடிக்குது! நான் எதுக்காக இவளைக் கட்டிக்கணும்? எனக்கு என்ன சுகங்கெடைக்கும்? சொல்லுங்களே!

பென் :- வயிரமுத்து நல்லா யோசனை பண்ணித் தான் சொல்றியா? நம்ம ஒறவு? எந்தங்கச்சிக்கு நான் செஞ்சிகுடுத்த சத்தியம் என்ன ஆவற து?

வயிர :- (அலட்சியமாக) பெரிய சத்தியம் போய்யா? நான் ஒண்ணும் ஏமாந்தவனில்லே. பொன் னப்பர் மகளை, இந்த சின்னப்பர் இனி என் னைக்கும் கல்யாணம் பண்ணிக்கவே மாட்டார்.

பொன் :- (வருந்தி) வயிரமுத்து! நீயா இப்படிப்பேசறே? இது நெசந்தானா?

வயிர: கலப்பில்லாத நெசம். பேசறது நானே தான். ஏமா மனசை யாராலியும் மாத்தமுடியாது தெரியுமில்லே? நான் வர்றேன்.

(மிடுக்காகப் போகிறான்.)

பொன் - வயிரமுத்து. வயிரமுத்து. ஆஃகா!... போய்விட்டானே! இடிந்தது என் மனக் கோட்டை ஒழிந்தது என் கெளரவம். ஐயோ!. நான் என்ன செய்வேன்! -

36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னொளி.pdf/38&oldid=1412922" இலிருந்து மீள்விக்கப்பட்டது