பக்கம்:மின்னொளி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மின்னொளி

இனி இவளோட வாழ்வு, ஆற்றில் கவிழ்ந்த படகுதானா?

செல்ல : இல்லை. இப்பொழுதும்,வழி இருக்கிறது.மன்னிக்கவேண்டும்.நீங்கள் ஒப்பினால் கரை சேர்க்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

பொன்:-சொல்றது..? வெளங்கலியே!

ஐயா! வாடிப்போயிற்று என்று நீங்கள் நினைக்கும் இந்த வண்னமலரை, நான் சூடிக் கொள்கிறேன் சென்னியில்! 

இருளன் :- எசமான் நீங்க பாக்கியம் செஞ்சவங்க! மனம்போல மாங்கல்யம் சரீன்னு சொல்லுங்க.

பொன் :- (திகைத்து) மின்னொளி எனக்கு என்ன சொல்றதின்னே தெரியலியே!

மின்னொளி: (எழுத்து உட்கார்ந்து) அப்பா என் வேண்டு கோள் ஒ ன்று. மறுக்கமாட்டீர்களே? -

பொன் :- இனிமே, மறுக்கவே மாட்டேம்மா.

மின்னொளி :- என்னை முன்னரே இவருக்குக் கொடுத்துவிட்டேன் நான், கருணை கூர்ந்து மணந்து கொள்ள அனுமதியுங்கள்.

(எழுந்து வணங்குகிறாள்.)

பொன் :- (வாரியெடுத்து தழதழத்த குரலில்) கண்ணே! உன் மனம்போல் ஆகட்டும் எப்படியாவது நீ நல்லா இருந்தாப் போதும்,

மின்னொளி :- அப்பா! கல்வியால் கனிந்து, கொள்கை யால் விரிந்த உள்ளத்தில்தான் மனிதாபிமா

38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னொளி.pdf/40&oldid=1412924" இலிருந்து மீள்விக்கப்பட்டது