பக்கம்:மின்னொளி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மின்னொளி

பொன் :- (வியந்து) ஏன்டா? என்ன சங்கதி?

ஆள் - நம்ம வயிரமுத்து சாராயங் குடிச்சிருந்தானாம், பள்ளிக்கூடத்துக்கு நெருப்பு வச்சதும் அவருதானாம் ஏரிக்கரைத் தோப்பிலே காசாட் டம் ஆடிக்கிட்டிருந்தாராம், மதுவிலுக்குப் போலி சாரு வந்தவங்க, புடிச்சிகிட்டுப் போறாங்க எச மான்!

பொன் :- (வியந்து) என்ன ? நெசம்மாவா? வயிரமுத்தா? அவனா பள்ளிக்கட்டடத்துக்கு நெருப்பு வச்சான்? என் தங்கச்சி மகனா..? அடப்பாவி! போலீசா புடிச்சிகிட்டுபோவுது? அடக் கடவுளே!

மின்னொளி :- (புன்னகையோடு) அதற்கு நாமென்னப்பா செய்வது? எல்லாம் வினைப்பயன்...! எனைப்பகை யுற்றாரும் உய்வர், வினைப் பகை வீயாது பின் சென்று அடும்” என்று தெரியாமலா சொன்னார் திருவள்ளுவர் ?

செல்ல :- மின்னொளி பெயர்மட்டுமல்ல, உன் சொற்களும் மின்னொளியே....!

            -திரை-
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னொளி.pdf/42&oldid=1412928" இலிருந்து மீள்விக்கப்பட்டது