பக்கம்:மின்னொளி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
பதிப்புரை.
"சிற்றஊர்களே நாட்டின் உயிர்நாடி" என்று

சொல்லுகின்றனர். ஆனால் நாட்டின் பலவீனமான பகுதிகளும் அவைகளே கல்வியின்மை, அறியாமை, மூட நம்பிக்கை, கேடுதரும் பழக்க வழக்கங்கள் உயிர் வாழும் காட்சிசாலையாக விளங்குகின்றன. சிற்றூர்கள்! கிராமத் சீர்திருத்தம் தேவைஎன்பது எக்கட்சியினரும் ஒப்பிய முடிபு. அவ்வகையில் ஒரு சிறிய முயற்சி இப்புத்தகம்.

எந்த ஒரு நல்ல கருத்தையும் பரப்புவதற்கு

நாடகம் ஏற்ற சாதனம். ஒரு குறிக்கோள்-நீதி-படிப் பினையற்ற நாடகங்கள் வெறும் பொழுது போக் காகும். தற்காலத்தேவை அதுவன்று.

மின்னொளி முன்னேற்றக் கருத்துக்களின் அடிப்

படையில் எழுந்த ஓர் சிறு நாடகம். பழமைப்பாசி படர்ந்த சிற்றூரைச் சீர்திருத்த முனைகிறார் ஒர் இளம் ஆசிரியர். அவருக்கு ஆதரவு காட்டுகிறாள் ஓர் இள நங்கை, பலத்த எதிர்ப்பு முளைக்கிறது. பழைமையும் புதுமையும் முட்டி மோதிக்கொள்கின்றன. இறுதியில் அறிவும் அன்பும் வெல்கின்றன. இது கதையின் சாரம்.

மின்னொளி படிப்பதற்கும், நடிப்பதற்கும் ஏற்ற

நல்ல நாடகம். சீர்திருத்தப் பணிபுரிய விரும்பும் நடிப் புக் கலைஞர்கட்கும், மாணவர்க்கும், தமிழ்ப் பெருமக் களுக்கும் மகிழ்வோடு இதைப் படைக்கின்றோம். இரண்டாம் பதிப்பாக ஆதரவு நல்குவார்களாக.

தென்றல் நூற்பதிப்புக் கழகத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னொளி.pdf/5&oldid=1491782" இலிருந்து மீள்விக்கப்பட்டது