பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் 87 கொண்ட நட்பினுல் கூறுவதன்று. நான் காத்தின் அரப்பா. யோர்தான் ஆற்றுக்குக் கிழக்கே வாழ்ந்த கிரியாதைம் (யோர்தான்) மரபினன். இப்போது நீ ஏதேனும் அறிய வேண்டுமானுல் முதலில் என்னை நீ அறிந்துகொள்ள வேண் டும். நான் உனது அரும் வல்லமையையும், அரிய செயல் களைப் பற்றியும் நன்கு கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனல் நான் அவற்றை நம்பவில்லை. அப்படிப்பட்ட உன்னை , நேருக்கு நேர் ஒர் அரங்கிலோ வெளியிலோ கண்டு உன்ளுேடு அறைகூவல் விட்டுப் போரிட எனக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை. அப்படித் திசையெங்கும் புகழ் பரப்பி நின்ற ஒருவனே நான் இப்போது காண வந்திருக்கிறேன். உனது உலகளாவிய புகழுக்கும் உன் உடல் அமைப்புக் கும் ஏதேனும் தொடர்பு இருக்கின்றதா எனக் கணிக்க வந்திருக்கிறேன். சிம்சோன்: என் வலிமையைக் கணிப்பது கண்ணுல் அன்று; களத்தின் மோதலால் மட்டுமே அறிய முடியும். அரப்பா: நீ என்னை மற்போருக்கு அறைகூவல் விடு கிருயா? ஐயோ! இந்த விலங்கும், சடினமான மாவரைக் கும் பணியும் உன் வலிமையைக் குன்றச் செய்திருக்குமே. செத்த கழுதையின் தாடையெலும்பாலேயே ஆயிரக்கணக் கானேரை நீ கொன்ற அந்தக் களத்தில் நான் மட்டும் இருந் திருந்தால், எவ்வளவு பேறுடையதாக அது இருந்திருக்கும். உன்னே வேறு ஒரு படையை நாடி ஒடச்செய்திருப்பேன் அல்லது செத்துப்போன அந்தக் கழுதையின் பிணத்தருகே உன்னைக் கிடத்தியிருப்பேன். அப்படி நடந்திருப்பின் உன்னைப் பிணமாகவோ அல்லது அடிமையாகவோ ஆக்கிய பெருமை பாலத்தீனத்துக்கு ஒரு பெலித்தியலை கிடைத்திருக்கும். இசுரவேல் இனத்தவனை வென்ற பெருமை எனக்குக் கிடைத் திருக்கும். உன்னுேடு நான் மற்போரிட்டிருந்தால் உனது புகழை உன்னிடமிருந்து பறித்திருப்பேன். ஆளுல் அப் பெருமையை நான் இழந்துவிட்டேன். ஏனெனில் வலி குன்றிய நிலையில் இருக்கும் ஒரு குருடனோடு நான் இப்போது போரிடப்போவதில்லை.