பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் 93. முன்ளுேக்கி வா. என் கால்கள் பிணைக்கப்பட்டிருப்பினும், கைகள் விடுபட்டே உள்ளன. அரப்பா: இந்த இழி சொல்லுக்கு வேறுவிதமான தண்டனையே பொருத்தம், சிம்சோன்: மானங்கெட்ட கோழையே, போய் விடு. நான் விலங்கால் பிணைக்கப்பட்டிருப்பினும் உன்னை நோக்கி ஒடி வந்து, ஒரே அடியில் உன்னை வீழ்ததி, மீண்டும் உன்னை மேலே தூக்கி, நிலத்தில் அறைந்து உள் மூளையை, முட்டிகளைச் சிதறடிததுவிடுவேன், போய் விடு. அரப்பா: பொனிசியர்களின் போர்க் கடவுளாம் அசுட் ரோத்தின் பெயரால் உரைக்கிறேன். நீ, விரைவில் இந்த உனது பெருமைக்குரிய சொற்களுக்காய் அழப்போகிருய். குழு ஆள்: அரக்கன் அரப்பா, தொங்கிய தலையுடன், அகந்தை அழிந்தவளுய்த் தோல்வியான பார்வையுடன், ஆலை சினத்துடன் அகன்றுவிட்டான். சிம்சோன்: அவ் அரக்கனைக் கண்டோ அவனின் மைந்தர் களைக் கண்டோ நான் அஞ்சுவதில்லை. அவனுக்கு ஐந்து மைந்தர்கள் மாபெரும் வடிவினர் என்றும் அவர்களில் மூத்தவன் கோலியாத்து என்பதையும் நான் அறிவேன். குழு ஆள்: அரப்பா ஆண்டைகளிடம் சென்று உனக்குப் பகையாகப் பேசுவானென்று நான் அஞ்சுகிறேன். எப்படியும் நீ இதனினும் அதிக துன்பத்தை எதிர்நோக்கி இருக்கிருய். சிம்சோன்: இங்கு நடந்தவற்றை அவன் அங்குச் சென்று அறிவிக்க முடியும். ஆனால் நான அவனைப் போருக்கு அழைத்ததை அறிவிக்க மாடடான். அது அவன் பெருமைக்கு இழுககு; பிறர் அவன் வீரத்தின் மீது ஐயம் கொள்ளவும் ஏதுவாக இருக்கும். மேலும் இன்னல்களை என்னல் தாங்கிக் கொள்ள இயலாது, மடிநது விடுவேன் என்ற எண்ணத்தில் அவர்கள் இதனினும் கொடிய இன்னல் விளைவிக்கத் துணிய மாட்டார்கள். நான் அவர்களுக்குப் பயனுள்ளவனாயிருக் கிறேன். பல மாந்தர் செய்கின்ற பணிகளை நான் ஒட்டு