பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் 95. உள்ளன. பார்வையிழப்புக்கு முன்னும், பின்னும் இரண்டு நிலைகளிலும் இவ்விரு சீரிய பண்புகளை நீ கொண்டுள்ளாய். பார்வை இழப்புக்கு முன் ஒரு மறவன்போல் துணிந்து நின்ருய். இழப்புக்குப் பின் சான்ருேன்போல் பொறுமை யாய்க் காணப்படுகிருய். வாழ்வில் பொறுமையால் மிகச் சிறந்த அருமைகளைப் படைத்த சான்ருேர் வரிசையில் நீயும் இடம்பெறுகிருய். வருணனுக்குப் புகழ்பாட இன்று விடுமுறை. எனினும் நீ ஒய்வின்றி இருக்கிருய். ஏனெனில் இன்று நீ உள்ளத்தால் ஒய்வின்றி உழன்றுகொண்டு இருக்கிருய். பணி நாள்களில் கைகளால் உழைப்பதைவிட இன்று உன் மன உளைச்சல் மிகுதியே. இருப்பினும் அதிகத் துன்பம் அடுத்து வர இருக் கிறது. யாரோ வேறு ஒரு மாந்தன் இப் பக்கமாய் வந்து கொண்டிருப்பதைக் காண்கிறேன். கைவண்ணம் மிக்க கோலோடும், தடியுடனும் வருகிருன். எவ்வளவு விரைவாக வர முடியுமோ அவ்வளவு விரைவாக வந்து கொண்டிருக் கிருன். அவன் ஏதோ ஒரு பரபரப்பான செய்தி கொண்டு வருபவனைப்போல காணப்படுகிருன். அவனுடைய ஆடையி லிருந்து அவன் ஒரு பொது மக்களின் அதிகாரிபோல் தோன்றுகிருன். இப்போது அவன் அண்மையில் வந்து விட்டான். நான் நினைக்கிறேன், செய்தி சுருக்கமானதாகவும் படு விரைவான ஒன்ருகவும் இருக்குமென்று. அதிகாரி: யூதர்களே, நான் கைதி சிம்சோனைக் காண வந்திருக்கிறேன். குழு ஆள்: அதோ அங்கே இருக்கிருன். அவனுடைய விலங்குகள் அவனே அடையாளம் காட்டும். அதிகாரி: சிம்சோனே! வருணனைச் சிறப்பிக்கும் வண்ணம், தாங்கள் ஒரு விருந்தும் கேளிக்கையும் மிகச் சிறப்பாக இன்று நடத்துவதாக உன்னிடம் அறிவிக்கச் சொல்லி பெலித்திய ஆண்டைகள் என்னை உன்னிடம் அனுப்பியுள்ளனர். உனது மாபெரும் உடல் வலிமையால் அருஞ்செயல் புரிந்து அவர்களை நீ மகிழ்விக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ள