பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"திருவள்ளுவனே! திருவள்ளுவனே திரும்ப வேண்டுகிறேன் தென்னுட்டில் நீ பிறந்தாலன்றிச் செந்தமிழர் வாழார். பெருமை இழந்தார், உரிமை இழந்தார், வீரம் இழந்தாரே. பீடுறும் வாழ்வும் இல்லை அடடே பேடிகள் ஆளுரே; ஒருவன் நீதான் உலகை உயர்த்தும் உரம்கொள் சிந்தனையின் ஓர் வழிகாட்டி, ஒளிரும் ஞாயிறு, முழங்கு பேராழி. திரும்ப வருக, திரும்பி வருக, தேவை நின் வருகை! ஒர்திருத்தம்மிகு பெரியார்க்குற்ற தோழனும் ஆளுயே: கருவை அழித்து வந்தேறிகளின் காலடி இல்லாமல் காப்பாய், நாட்டை; மீட்பாய் எங்களைக் கடிதில் வாராயோ. உருவ வணக்கம், ஊழல் மதங்கள், ஒராயிரம் சாதி உண்டாக்கியவரை ஒழித்திட வருக; உலகைக் காப்பாயே! திருவிட நாட்டில் தேவை நின் ஆட்சி திருவள்ளுவனே வா! செந்நாப் புலவா! புரட்சித் தீயில் புத்துல கமைப்பாயே!” என்று எழுதினேன். இப் பாடலே அப்பொழுது பள்ளியில் நானும் என் நண்பர்களும் கூட்டாக இருந்து கையெழுத்து ஏடாக நடத்திய 'தமிழணங்கு மாத ஏட்டிலும் வெளியிட் டோம். பாடலைப் படித்த என் தமிழாசிரியர் பாராட்டினர். ஆனல் யாப்பின் அளவைeறிய அடிகளைக்கொண்ட பாட்டு என்ருர் (இன்ருயிருந்தால் மூன்று தாழிசைகள் ஒரெதுகை கொண்ட பாட்டு என்றிருப்பேன்). ஆங்கிலப் பாடல்களைத் தழுவி எழுதுவதும், எனக்குப் புரிந்த அளவு மொழிபெயர்ப்பதும் என் பள்ளிப் பருவத்தி லேயே தொடங்கிவிட்டன. உயர்நிலைப் பள்ளியோடு தடைபட்ட என் கல்வி தமிழின் திசை திரும்பியது. ஆங்கிலத்தை ஆசிரியரின்றியே கற்கத் தொடங்கினேன். ஐம்பதுகளில் வெளிவந்த பல நல்ல தமிழ் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், கதைகள், புதினங்கள் எல்லாம் என்னை அந்தந்த மூல நூல்களைத் தேடிப் படிக்கத் தூண்டின. அவற்றில் பெரிதும் எனக்குத் துணைபுரிந்தவை பள்ளி-கல்லூரி ஆங்கிலத் துணைப்பாட நூல்கள். கல்லூரி இளங்கலை, முதுகலை பாட நூல்களும் பாட்டிலக்கியத்தில் பெரிதும் துணைபுரிந்தன. அந் நூல்களின் உரையாசிரியர் viii