பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 மாமல்லன் சிம்சோன் பொருட்டு வெறுக்கத்தக்க இடத்தில் என் வலிமையின் ஆற்றலைக் காட்டுவதைவிட, ஒரு நசரேயனுக்கு வெறுக்கத் தக்க வேறு பணிகள் இருக்க முடியாது. அப்படிச் செய்வது இழிவானது, அருவருக்கத் தக்கது, பழிப்புக்குரியது, புனித மற்றது, தீங்கானது. குழு ஆள்: இருப்பினும், அருவருக்கத்தக்க சிலை வழி பாட்டுக்காரர்களாகிய பெலித்தியர்களுக்கு இந்த வலிமை யால் தொண்டு செய்கிருயே. சிம்சோன்: சிலைகளைச் சிறப்பிக்கவன்று, என்னைச் சிறைப் பிடித்து வைத்திருப்பவர்களிடமிருந்து எனது உணவை நேர்மையாய், நெறியாய்ப் பெற்று கொள்ளவே நான் என் வலிமையைப் பயன்படுத்துகிறேன். விருப்பின்றிச் செய்யும் பணி ஒருவனைப் பழிப்பிக்காது. சிம்சோன்: ‘விருப்பின்றிச் செய்யும் பணி ஒருவனைப்பழிப் பிக்காது’ என்ற முதுமொழி ஒருவன் அப்படிப்பட்ட விருப்ப மில்லாச் செயலே உடல் வலுவின் கட்டாயத்தால் செய்யும் போதுதான் அது பொருந்தும். நான் வருணனின் கோயிலுக்கு மற்றவர்களால் இழுத்துச் செல்லப்படாவிட்டால், அப் பணியைச் செய்யும்படி கட்டாயப்படுத்தப்படவில்லை என்று தான் பொருள். நான் பெலித்திய ஆண்டைகளால் கட்டளை இடப்பட்டுள்ளேனே தவிர இன்னும் கட்டாயப்படுத்தப் படவில்லை. கட்டளை, கட்டாயமாகாது. ஏனெனில், கட்டளையை ஏற்றுக் கொள்வது அவனவனின் விருப்பத்தைப் பொருத்தது. நான் பெலித்திய ஆண்டைகளின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, வருணனின் கோயிற்குச் சென்று, அவர்களை மகிழ்விப்பேளுகில், அப்படிச் செய்வது கட்டாயத்தின்கீழ் அன்று, என் விருப்பத்தின்படியேயாகும். அப்படிச் செயதால், மாந்தர்களுக்கு அஞ்சில்ை, கடவுளின் வெறுப்புக்கு ஆளாகும் தொல்லையை நானே உருவாக்கிக் கொணடதாக தான் பொருள். அது, கடவுளே விட மாந்தனுக்குச் சிறப்பு கொடுத்ததாகவேயாகும். கடவுளைப் புறக்கணித்து மாந்த னுக்குச் சிறப்பு அளிப்பது கடவுளின் சினத்தை மூட்டும். அப்படிச் செய்வேயிைன், அதற்காக நான் வருந்தித் திருந்தி