பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 மாமல்லன் சிம்சோன் இழுத்துச் செல்ல வாய்ப்புக் கிட்டிவிடும். வரம்பற்ற அதிகாரத்தால் அவர்கள் எனக்குக் கட்டளையிட்டுள்ளனர். அவர்கள் என் ஆண்டைகள், அவர்களே நான் மீற முடியாது. வாழ்வுக்காகத் தன் முடிவை மாற்றிக்கொள்பவன் யார்? (மாந்தர்களின் வழிகள் மாற்றத்திற்குரியன.) உங்களோடு நான் வருகிறேன் என்ருலும் இசுரவேல் மதத்தினல் புறக் கணிக்கப்பட்ட எந்த இழிவான கட்டளைக்கும் நான் இணங்க மாட்டேன் என்பது உறுதி. அதிகாரி: என்னோடு வரத் தீர்மானம் செய்ததற்காய் உன்னைப் பாராட்டுகிறேன். இந்த விலங்குகளைக் களைந்து விடு. உனது கீழ்ப்படிதலால் பெலித்திய ஆண்டைகளை நீ வெற்றிகாண முடியும். உனக்கு அவர்கள் உதவுவார்கள். விடுதலைகூட செய்வார்கள். சிம்சோன்: (குழு ஆள்களிடம்) உடன்பிறவாத் தோழர் களே, நான் விடைபெறுகிறேன். நீங்களும் என்னோடு வர நான் விரும்பவில்லை. நண்பர்கள் சூழ என்னை அவா.கள் கண்டால் கொதிப்படைவார்கள். ஒரு காலத்தில் அவர் களின் எதிரியாயிருந்த என்னைக் கண்டு எவ்வளவு சினமுறு வார்களோ? நான அறியேன். அன்று அவர்கட்கு நான் அச்சமூட்டுபவயிைருந்தேன். குடித்து வெறித்து இருக்கிற இந்த வேளையிலே அவர்கள் என்னைக் கண்டால், அது அவர் களுக்குப் பெரும் பதற்றமூட்டும். குடி வெறியில் ஆண்டைகள் கொள்ளும் அடக்குமுறை உணர்வு அதிகம். அதைப் போலவே, விருந்து மயக்கத்தில் அறிவுரைஞர்கள் மதவெறி மிகுந்து காணப்படுவர். அவர்போல், விடுமுறை நாள்களில், பொதுமக்கள், முரடராகவும், வெறியராகவும் இருப்பார் கள். தணியாச் சினம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். என்னல் செய்யப்படும் செயல்கள் இசுரவேலர்களுககும், இசுரவேலர்களின் தெய்வத்திற்கும். என் நாட்டிற்கும், எனக்கும் இழிவையும் மானக்கேட்டையும் உண்டாக்கும் எதையும் நீங்கள் செவிமடுக்காதீர். இதுவே எனது வாழ் வின் இறுதி நிகழ்ச்சியாக இருக்குமோ? அல்லவோ? என்னல் இப்போது சொல்ல முடியாது.