பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் 105. இழந்த பார்வையை வழங்கியிருந்தால், பெலித்தியர்களை ஏராளமாய்க் கொன்று குவித்து அவர்களின் பிணங்களின்மீது அவன் நடந்து வந்துகொண்டிருக்கலாம். மனுேவா: சிம்சோன் தன் பகைவர்களைக் கொன்று குவிக்கிருன் என்ற எண்ணத்தினால் ஏற்படுகின்ற மகிழ்ச்சி மிக உறுதியாய்த் தோன்றுகின்றது. குழு ஆள்: கடந்த கா லத் தி ல் எவராலும் நம்ப முடியாத அளவுக்குக் கடவுள் தன் மக்களுக்குப் பல செயல் க 3ள ச் செய்துள்ளார். சிம்சோனுக்குப் பார்வையை மீண்டும் கொடுப்பதிலிருந்து அவரை எதல்ை தடுக்க முடியும்? மனுேவா: கடவுள் எல்லாவற்றையும் செய்ய வல்லவரா யிருக்கிருர் என்பதை நான் அறிவேன். ஆனல் சிம்சோனுக்கு ஏதேனும் செய்வார் என்பது சற்றும் நம்பற்குரியதாயில்லை. கடவுள் சிம்சோனுக்குப் பார்வையை மீண்டும் கொடுப்பார் என்ற நம்பிக்கை, நமமை அப்படி எண்ணச் செய்கிறது. விரைவில் நமக்குத் தகவல்கள் கிடைக்கும். இங்குச் சற்று நேரம் காத்திருப்போம். குழு ஆள்: நல்ல தகவலைவிடக் கேடான செய்தியே விரைவில் வரவிருக்கிறது. ஏனெனில் கெட்டச் செய்தி நல்ல செய்தியைவிட விரைந்து பரவும். நமது ஆவலேத் தணிக்க, ஒரு எபிரேயன் நம்மை நோக்கி விரைந்து வருவதை நான் காண்கிறேன். அவனும் ஒரு இசுரவேலய்ை இருப்பான் என்று ஊகிக்கிறேன். துாதன்: நான் எங்கே ஒடுவேன்? எவ் வழியில் பறப் பேன்? நான் இறுதியாகக் கண்ட அந்த அச்சந்தரும் காட்சி என் புறக்கண் விட்டு அகன்ருலும் மனக்கண்ணில் தெளிவாய்த் தெரிகிறதே! அதை என்னல் மறக்க முடியவில்லையே. என் உணர்வுகள், நினைவுகள் எனக்கில்லாவிட்டாலும் கடவுள் எப்படியோ என்னை இப் பக்கமாய் வழிநடத்திக்கொண்டு வந்திருக்கிரு.ர். மதிப்பிற்குரிய மனேவாவே, என் நாட் டினரே, நிகழ்ச்சி நடந்த இடத்திற்குச் சற்றுத் தொலைவி