பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் 107 மனுேவா: காலம் கழித்துச் செய்தியை அறிவது கவலை யைப் பெருக்கும். ஆம் , செய்தியைச் சொல். துாதன்: துயரச் செய்தியைச் சுருக்கமாய்க் கேள், சிம்சோன் மடிந்துபோனன். மனுேவா: உண்மையாகவா. இது எனக்கு மிகவும் துயரமான செய்திதான். அவனை விடுவிக்க நான் கொண் டிருந்த நம்பிக்கையெல்லாம் சிதைந்துவிட்டன. இறப்பு அவனை விடுவித்துவிட்டது. இறப்பே நம் அனைவருக்கும் நிலை யான விடுதலை தருகிறது. இறப்பு அவனைப் பெலிததியர் களின் சிறையிலிருந்து மட்டுமன்று, அவன் உடலில் சிறை பட்டுக்கிடந்த உயிரையும் ஈட்டுத்தொகை தந்து மீட்டுக் கொண்டது. ஒரு பெண் கருவுற்றபோது, குறிப்பிட்ட காலம் முடிந்தபின், குழந்தையைப் பெற்றெடுப்போம் என்ற நம்பிக்கையில் மகிழ்ச்சி பெறுகிருள். ஆனல் அந்தக் கருவே குறித்த காலத்திற்குமுன் முதிராததாய் வெளிப்படின் துயர் அடிைகிருள். அதைப்போன்றே ஈட்டுத்தொகை தந்து என் மகனை மீட்டுக்கொள்வேன் என்ற நம்பிக்கையில் மகிழ்ந் திருந்தேன். ஆனல் அவனே மாய்ந்தபோனன். அதன் விளைவால் என் நம்பிக்கை நிறைவேறவில்லை. பெலித்தியர்க ளிடமிருந்து என் மகனை விடுவித்து நான் அடையவிருந்த மகிழ்ச்சியை அடையாமலே போய்விட்டேன். குளிர்கால மூடுபனி முழுமையாய் வி ல கு மு ன் ேன வெளிவந்த இளவேனில் முதல் மொட்டு மலரு முன் வாடி விழுவதைப் போல், முழுமையாய் நுகருமுன்னே என் மகிழ்ச்சி துண்டிக்கப்பட்டது. இ. ரு ப் பி னு ம் என் மகனின் மறைவுக்காய் நான் மனம்விட்டு அழுமுன் அவன் எப்படி மடிந்தான் எனச் சொல். ஏனெனில் ஒருவனின் இறப்பு அவன் வாழ்க்கை பு க ழ் ச் சி க் கு ரி ய த ா இகழ்ச்சிக் குரியதா என்பதைத் தீர்மானிப்பதால், அவன் எப்படி மடிந்தான் என்று எனக்குச் சொல். அனைவரின் அழிவுக் கும் அவன் காரணமாயிருந்தான் என்று நீ சொன்னய் அப்படி யெனில் அவனைக் கொன்றவன் யார்? அவனுக்குச்