பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 12 மாமல்லன் சிம்சோன் உள்ளுணர்வால் உந்தப்பட்டு, சிம்சோனிடம் மறைந்திருந்த வல்லமை வெளிப்பட்டது. பண்ணைகளிலுள்ள பறவைகளின் கூடுகளையும் மற்றும் ஒய்விடங்களையும் மாலையில் வந்து அழிக் கும் அரவுப்புள்போல் வரிசை வரிசையாய் உட்கார்ந்திருந்த பெலித்தியர்களைச் சிம்சோன் அழித்துவிட்டான். கூடுகளில் இளைப்பாறிக் கொண்டிருக்கும் பறவைகளைக் கழுகு எதிர் பாராத வகையில் தாக்கி அழிப்பதுபோல், சிம்சோன் பெலித் தியர்களை அழித்துவிட்டான். அரே பி யக் காடுகளிலே தங்களையே எரித்துக்கொண்டு சாம்பலாகிவிடுகின்ற தீப் பறவைகள் (போனிகசு), சாம்பலிலிருந்து மீண்டும் இளமை யோடு உயிர்த்தெழுவதைப் போன்று மறைந்த சிம்சோனின் வலிமை மீண்டும் புத்தம் புதிய பொலிவுடனும் வலு புெடனும் வெளிப்பட்டுள்ளது. அங்ங்ணம் வெளிப்பட்டுத் தனது பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்றியுள்ளது. முதுமை யடைந்த தீப்பறவை மடிவதைப்போல் சிம்சோனின் உடல் அழிந்துவிட்டது. ஆ ைல் அவ் வழிவிலிருந்து அவனின் புகழுடம்பு தோன்றி என்றும் வாழும். மனுேவா: இப்போது கண்ணிர் சிந்தவோ கவலைப் படவோ ஏதுமில்லை. சிம்சோன் சிம்சோனகவே நடந்து கொண்டான். கடவுள் அவனிடம் எதிர்பார்த்தபடியே கடவுளின் அருள் பெற்ற ஊழியனுகவே நடந்துகொண் டான். அவனது வாழ்வு துணிவு நிறைந்தது. அந்த வாழ்வு தனக்குத் தீங்கு விளைத்தவர்களைப் பழிவாங்குவதில் முடிந் தது. ஆண்டுகள் பல வா ய் அழுது புலம்பும்வண்ணம் பெலித்தியர்களை அவன் பழிவாங்கிவிட்டிான். பெலித்தியர் களும், அவர்களின் நகரங்களும் இசுரவேலர்களிடம் ஆற்ற லிழந்து காணப்படுகின்றன. இசுரவேலர்கள் தங்கள் எதிரி களிடமிருந்து விடுவிககப்பட்டனர். அவர்கள் இனி ஒன்று கூடி இந்த வியப்பை நன்கு பயன்படுத்திக்கொள்ளட்டும். அவன் தனக்கும், எனக்கும் அழியாப் புகழை ஈட்டிக்கொண் டான். இவையெல்லாம், தன் குடும்பத்திற்கோ, மதத் திற்கோ எவ்வித இழுக்கும் ஏற்படாவண்ணம் செய்துமுடித் தான். கடவுள் சிம்சோனைக் கைவிட்டுவிட்டதாக நினைத்