பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறந்த இலக்கியம் என்பது மிகுந்த பொருட்செறிவு மிளிரும் மொழியே என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் இந் நாடகத்தைத் தமிழில் பெயர்க்கையில் மூலத்தின் சிக்க லற்ற எளிமை இருக்கவேண்டும்; கருத்துணர்ச்சி கமழ வேண்டும்; இவ்விரண்டும் கற்பவர் நெஞ்சில் நேரிடையாகப் பாயவேண்டும் என்ற நோக்கோடு யாப்பமைதியை விட்டு உரைநடையைக் கையாண்டேன் (யாப்புவழிப் பெயர்ப்பில் தான் மில்ட்டனின் உள்ளொளி பாய்ச்சும் உணர்ச்சி வெள்ளத்தைக் காட்ட முடியும். அவ் வழியிலும் நூல் வெளி வரும்). யாப்பொழுங்குபெற்ற பாட்டில் ஒசை இன்பம் மட்டும் இல்லை; உணர்ச்சி இருக்கிறது; ஒர் அழகிருக்கிறது: அதில் ஒரு புதை பொருள் இருக்கிறது. ஏன், வாழ்வின் எல்லா உயிர்ப்பாற்றலும் இருக்கிறது. மில்ட்டனின் பாட்டாண்மையில் மூன்று வகையான குரல்களைக் கேட்கிருேம்; வீட்டு வாழ் க் ைக, நாட்டு வாழ்க்கை, உலக வாழ்க்கை என்பன. முதலில் பாவலன் தனக்குள்ளேயே பேசிக்கொள்கிருன்; அடுத்து நாடக மாந்தர்வழித் தன் குரலை வெளிக்காட்டுகிருன்; பின்னர் உலகத்தைப் பார்த்து விளிக்கிருன். முழுமையின் அழகை, ஆழத்தை நாம் பார்ப்பதுதான் சிறந்த படைப்பின் இயல்பாகும். அவ் வகையில் ஆங்கில இலக்கியத்தில் ஆழங்கால்பட்ட தோழர் ம. இலெ. தங்கப்பா குற்றங்குறைகளை நீக்கி நாடகச் சிற்பத்தைச் செப்பம் செய்து தந்தார். நாடகக் காப்பியத்தின் பெயர்ப்பைக் கண்ட அளவில் மில்ட்டனின் இலக்கியப் பெருமையும் அருமையும் அதன் கருத்துச் செறிவில் மட்டுமில்லை, காலத்தின் பின்னணியி லும் உள்ளது: மக்கட் புலவன் அதேைலயே சிறக்கிருன் என்பதை எடுத்துக்காட்டி மில்ட்டனின் வாழ்வுப் பின்னணி யினை அரும்பாடுபட்டுத் தமிழிலக்கிய வரலாற்று ஆசிரியர் கட்கு ஒரு முன்னேட்டத்தைக் காட்டினார் இளவல் ஆ. இரா. வேங்கடாசலபதி.