பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் வரலாறு 3. அவருக்கு வேறு ஆசிரியர்கள் வைத்துத் தந்தையார் நூல்றி வின் பல துறைகளையும் இவருக்குப் புகட்ட முனைந்தார். சான் மில்ட்டனுக்கும் நூல்களில் தந்தையைப் போன்றே விருப்பமும், தந்தையின் முற்போக்குவாய்ந்த சீர்திருத்த &lotuşşā (Extreme Protestantism or Puritanism) Ligyub இருந்தமையால் இவ் ஒயா முயற்சியிடையும் தளரா ஊக்க முடையவராயினர். எனது இ ள ைம முதற்கொண்டே தந்தையார் இடையரு ஊக்கத்துடன் எனக்கு மொழிகளின் அறிவையும் அறிவியல் துறைகளின் அறிவையும் புகட்டிவந்தார். பள்ளியி லும் வீட்டிலும் எனக்குப் பல ஆசிரியர்கள் பல துறைகளில் பயிற்சி தரும்படி அத் தந்தையார் (இறைவன் அவருக்கு இன்னருள் புரிக) அமர்த்தியிருந்தனர். உயர்தனிச் செம் மொழிகளில் வல்லவகை வேண்டுமென்ற விருப்பம் எனக்கும் இருந்தமையினால் நான் முயன்று உழைப்பைப் பன்மடங் காக்கினேன்’ என்று அவரே கூறுகிரு.ர். பள்ளிப் பயிற்சி முடிந்தபின் மில்ட்டன் கேம்பிரிட்சு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கிறித்து கல்லூரியில் பயிற்சி பெறச் சென்ருர். இக் காலத்தில் மில்ட்டன் இளமையும் வனப்பும் மிக்கவராயும், பொன்மைமிக்க நீண்ட முடி உடையவராயும் இருந்தனராம். அதனுடன் (இத்தகைய வெளியழகுடன் பொதுப்படையாகக் காணுதற்கரிதான) இறைவன் பற்றும் உடையவராயிருந்ததல்ை உடனெத்த மாணவரிடையே இவர் கிறித்து கல்லூரியின் இளம் கன்னி என நகைத்திறம்பட அழைக்கப்பட்டார். இலக்கிய உலகில் பிறக்கும்பொழுதே அவர் இளங் குயிலாகப் பிறந்திருக்க வேண்டும். அதினும் பிற குயில் களைப் போன்ற குயில் அல்லர் இவர். இவர் வேறு இறைபணி யிலேயே நின்ற நேர்மையுடைய குயில் என்னல் வேண்டும். பொன்னை ஒத்த உயர் அறிவு புது மலரின் மணத்தை ஒத்த இனிமையுடன் கலந்து, இரண்டும் சேரப் பொன்மலர் நாற்ற முடையதாயிற்று. விவிலிய நூலின் அருட் பாட்டுப்பகுதி 136-க்கு அவர் செய்த மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்