பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் வரலாறு 5 களும், இனிய மணமும், மெல்லிய தென்றலும், நறுங்கனி களும் நிறைந்து அஃது அழகுத் தெய்வத்தின் உறைவிடமோ என்ன விளங்கிற்று. இக் காலத்தில் இவர் எழுதிய கவிதைகளிலெல்லாம் இத் தென்றல் மணத்தையும் இவ் இன்னிசையையும் காண லாம். இவற்றுள் முதன்மையானது கோமஸ் (Comus) என்பது. இதில் யாழொலிக்கும் இனிமையூட்டும் பாட்டுக் கள் பல உள்ளன. இளைஞர் களியாட்ட உணர்ச்சியை இது நன்கு புலப்படுத்துகின்றது. களிமகன் (L’Aliegro) நிறை மகன் (ll Pensoroso) என்ற தலைப்புடைய இரு கவிதைகள் ஒன்றுக்கொன்று இணைப்புடைய இரு மணிகள். முதலது களிப்புடைய ஒருவன் ஒருநாட் பொழுதை எங்ங்ணம் போக்கி எங்ங்னம் துய்க்கிருன் என்பதையும், பின்னது அதேபோல நிறைவும் அறிவும் உடைய ஒருவன் எங்ங்னம் அப்பொழு தைக் கழிக்கிருன் என்பதையும் காட்டுகின்றன. ஒவ் வொருவனது மனப்பான்மைக்கும் ஒத்தபடி காட்சிகள், கருத்துக்கள் இருவேறு வகையாகத் திரிக்கப்பட்டு இரு வேறு வகைத் தெய்வத் தொகுதிகளின் செயல்களாகச் சுவைபட வரையப்பட்டுள்ளன. லிசிடசு என்ற இரங்கற்பா ஒன்றும் அர்க்கேடில் (முல்லை யங்கானம்) ஒன்றும் முல்லைத் திணைக்குரிய ஒவியங்கள் ஆகும். இவற்றுள் முன்னது (மில்ட்டனுடைய) நண்பர் எட்வர்டு சிங் என்பவரது பிரிவாலேற்பட்ட நினைவுகளைத் தருகிறது. ஆங்கில இலக்கியத்தின் இரங்கற்பாக்களுள் இது தலைசிறந்ததாகக் கருதப்படுகிறது. 2. நாடு சூழ் வரல் நம் நாட்டில் சமயப் பற்றுடையார் காசி, இராமேச்வரம் செல்வதுபோல இங்கிலாந்து முதலிய ஐரோப்பிய நாடுகளில் இலக்கியம், நாகரிகம், கலை ஆகியவற்றுள் பற்றுடையார் அவற்றை ஐரோப்பாவுக்குத் தாய் நாடுகளான இத்தாலி, கிரேக்கம் முதலிய பல நாடுகளைச் சுற்றிப் பார்வையிடுவர். எனவே கலையினும் அறிவினும் மேம்பட விரும்பிய மில்ட்ட