பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& மாமல்லன் சிம்சோன் இல்பென்சரோசோ (நிறைமகன்) என்ற கவிதையில் இவரே குறிப்பிட்டபடி துன்பமே இவருக்கு உயர் அறிவுக் கண்ணைத் தந்து இவர் கவிதையையும் தெய்வீகக் கவிதை யாக்கிற்று என்னலாம். அத் துன்பங்களுள் அவர் கண்ளுெளி இழந்தது ஒன்று. கற்பரசியாய், அவருக்கு வலக்கையாய் இருந்த அவருடைய இரண்டாம் மனைவி இறந்தது இன் னென்று. அவருடைய மூன்று புதல்வியரும் அவருக்கு உதவி செய்தனராயினும், அவர்கள் என்றும் அவர் இரண்டாம் மனைவியவ்வளவு அவர் குறிப்பறிந்தவரல்லர். அவரது மூன்ருவது துயர் அவரது கட்சி வீழ்ச்சியுற்றதேயாகும். இயற்கையிலேயே நூல்கள் வாசிப்பதில் தம் கருத்தை முற்றும் போக்கியிருந்த இக் கவிஞர் பெருமான், தம் வாழ்க் கையின் நடுப்பகுதியில் இங்ங்னம் இவ் அறப்போர்களில் ஈடு பட்டுப் பெருவாரியாக எழுதவும் வாசிக்கவும் நேர்ந்தமை யால், அவற்ருல் கண் தெரியாதபடி கண்ணின் ஒளியையே இழந்தார். போதாக்குறைக்கு அரசியல் புயல் மாறியடித்து அவர் நண்பர் கிராம்வெலின் ஆட்சி வீழ்ச்சியுற்றுப் பழைய முடியரசின் கான்முளையாகிய இரண்டாம் சார்லசு அரசர் பட்டமேற்ருர். அத்துடன் மில்ட்டன் அரசியல் பணி அகன் றது. இதனினும் பெருங்கேடு அவர் கட்சியாளர் பலருக்கு ஏற்பட்டதெனினும் அவரது கல்விப் புகழ் அவரது உலகியல் வாழ்வின் இகழினின்று அவரைப் பாதுகாத்தது. 4. கண்ணுெளி இழந்தபின் கருத்தொளி சிறந்தது செம்மையினும் கடுமையிலே பெரியோரது பெருமையை நன்கு காண்டலாகும். கண் போயினும் கண்ணினும் மிக்க எண்ணையும் எழுத்தையுமே பெரிதாக எண்ணிப் போற்றினர் மில்ட்டன். அவரது வாசிப்பு இதற்குப்பின் குறைவதற்கு மாருகக் கூடிற்று. தமக்கு வேண்டுபவற்றை எல்லாம் தம் புதல்வியர், மாணவர் முதலியவர்கள் உதவியால் வாசித்துக் கேட்டுக்கொண்டார். கண்னெளியிழந்த பின்னர்தான் மில்ட்டன் முதல்தரமான கவிதைகள் முற்றிலும் இயற்றினர் என்பது ஆங்கில மக்கள் அனைவர்க்கும் இறும்பூது தரும்