பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் வரலாறு 11 பயனக உலகில் தீவினை, நோய், முதுமை, சாக்காடு ஆகியவை ஏற்பட்டதும் இக் கதையின் விவரங்கள். இந் நூலின் முதல் எடுத்த மனிதன்றன் முதற்பிறழ்வை யும்" என்ற எடுப்புடன், தேவரும் வீரரும் என்றெடுத்த ஹோ மரது இலியதும், கிடந்தது வடக்கண் ஆங்கே’ என்றெடுத்த காளிதாசனது குமார சம்பவமும், உலகம் யாவையும்’ என்றெடுத்த க ம் ப ர் இராமாயணமும், உலகெலாம் என்றெடுத்த பெரிய புராணமும் ஈண்டு ஒப்புநோக்கத் தக்கன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையிற் சிறப்புடையதாயினும், பொருட்செறிவிலும் ஓசை முழக்கிலும், பெருமித நடையிலும் இவை எல்லாம் பெரிதும் பொது ஒப்புமையுடையன என்பதை அவற்றை வாசிப்போர் எளிதில் காணலாம். இவற்றில் காணும் இயற்கைக் காட்சிகள், மனித உணர்ச்சிகள், உயர் கருத்துக் கள் ஆகியவற்றைத் தொகுத்து ஒருங்கே தமிழ்மொழியில் வெளியிட்டால் பிறநாட்டினரே போன்று தமிழ்நாட்டினரும் அவற்றை ஒப்புமைப்படுத்தி உலகமுதற் கவிகளின் நலன் களைப் பருகுவர் என்பது உறுதி. 6. துறக்க மீட்சியும் முடிவும் மில்ட்டனின் நண்பருள் குவேக்கர்கள் அல்லது நண்பர் கழகத்தைச் சேர்ந்த த ா ம சு எ ல் வுட் டு என்பவர் மில்ட்டனுக்கு எழுதிய கடிதமொன்றில் அவர் எழுதிய நூலின் நயத்தையும் சி ற ப்பை யும் பாராட்டியதோடு துறக்கத்தின் வீழ்ச்சியைப்பற்றி இவ்வளவு எழுதியும் அதன் மீட்சிபற்றி ஒன்றும் கா ேளு மே என்ருராம். அதன் பொருத்தத்தை உணர்ந்து மில்ட்டன் பின்னர் துறக்க மீட்சி எழுதினர். முதுமையாலோ, போ தி ய நாள் மனத்தில் உறையாததாலோ, எக் காரணத்தாலோ துறக்க வீழ்ச்சி யில் கண்ட உயர்வும் பெருமிதமும் துறக்க மீட்சியில் மிகுதி யாகக் காணவில்லை. துறக்க வீழ்ச்சி 1667இல் வெளியிடப்பட்டது. ஆங்கி லேயருக்கு அழியாக் கருவூலமாய் விளங்கும் இந்த நூலை