பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மாமல்லன் சிம்சோன் எழுதிய ஆசிரியருக்கு இதல்ை கிடைத்தது 60 பொன் மட்டுமே. அவர் தங்கியிருந்த வீடு 1666இல் தீயில் எரிந்து பாதி கருகிற்று. அவர் எழுதிய கடைசி நூல் (துறக்க வீழ்ச்சி, துறக்க மீட்சி இவை நீங்கலாக) சாம்சன் அகனிஃதேசு அ ல் ல து மற்போர்வீரன் சாம்சன் என்னும் துன்பியல் நாடகமே (Tragedy) யாகும். இறக்கும் போதும் விவிலிய நூல் வாசிப்பும், இசை கேட்கும் பழக்கமும், இறைவன் நினைப்பும் அவரை விட்டு நீங்கவில்லை. 19ஆம் நூற்ருண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த வேட்ஸ்வொர்த் என்ற பெருங் கவிஞர் இவரைப்பற்றிக் குறிப்பிடுகையில்: ஈண்டு மில்ட்டன்! நீ எம்மிடை இருந்திடல் விழைவேம்; இங்கி லாந்துனை அழைத்தனள், புதுவர வின்றி யாண்டு மெம்முயிர்வாழ்க்கைகெட் டிழிந்தது; சமயம், இணையில் வீரமும், கல்வியும், இல்லறம் தானும், மாண்ட ஆங்கில மக்களின் இனியநல் அமைதி, மறையத் தன்னலச் சூழலுட் பட்டனம் யாமே. மீண்டு வந்தெமக் கினியும் ஓர் புத்துயிர் அருள்வாய்! மீண்டும் நல்லறம் ஒழுக்கமும் ஆண்மையும் தருவாய்! துருவ மீனெனத் தோற்றும்நின் வாழ்க்கையிங் கெமக்கே! தூய வானென அமைதியும் பெருமையும் உடையாய்! மருவு நீள்கடல் முழக்கென முழங்கும்நின் மொழிகள்! மனிதர் வாழ்விடை மனிதனுய் வாழ்ந்தபுத் தேள் நீ! திருவும் மேன்மையும் சீருறக் கொண்டனை எனினும் உருவில் எந்தமக் கெளியையு மாயினை பெரிதே, Milton, thou shouldst be living at this hour England hath need of thee : she is a fen Of stagnant waters : altar, sword and pen Fireside, the heroic wealth of hall and bower, Have forfeited their ancient English dower Of inward happiness. We are selfish men I Oh! raise us up, return to us again ;