பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழைய ஏற்பாட்டில் உள்ள சிம்சோன் வரலாறு 17 21 பின்பு கர்த்தருடைய தூதனைவர் மனேவாவுக்கும். அவன் மனைவிக்கும் காணப்படவில்லை; அப்பொழுது அவர் கர்த்தருடைய தூதன் என்று மைேவா அறிந்து, 22 தன் மனைவியைப் பார் த் து; நாம் தேவனைக் கண்டோம், சாகவே சாவோம் என்ருன். 23 அதற்கு அவன் மனைவி: கர்த்தர் நம்மைக் கொன்று. போடச் சித்தமாயிருந்தால், அவர் நம்முடைய கையிலே சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் ஒப்புக் கொள்ளமாட்டார், இவைகளையெல்ல்ாம் நமக்குக் காண்பிக் கவுமாட்டார், இவைகளே நமக்கு அறிவிக்கவுமாட்டார் என்ருள். 24 பின்பு அந்த ஸ் தி ரீ ஒரு குமாரனைப்பெற்று, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள்; அந்தப் பிள்ளை வளர்ந்தது, கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார். 25 அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவி லுள்ள தாணின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத் துவக்கினர். 14 அதிகாரம் 1 சிம்சோன் திம்னத்துக்குப் போ ய், திம்னத்திலே குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு, 2 திரும்ப வந்து, தன் தாயையும் தகப்பனையும் நோக்கி: திம்னத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண் ஆனக் கண்டேன்; அவளே எனக்குக் கொள்ளவேண்டும் என்ருன் . 3 அப்பொழுது அவன் தாயும் அவன் தகப்பனும் அவனை நோக்கி: நீ போய், விருத்தசேதனமில்லாத பெலிஸ் தரிடத்தில் ஒரு பெண்ணைக் கொள்ளவேண்டியதென்ன? உன் சகோதரரின் குமாரத்திகளிலும், எங்கள் ஜனமனைத்தி லும் பெண் இல்லையா என்ருர்கள். சிம்சோன் தன் தகப்பனை நோக்கி: அவள் என் கண்ணுக்குப் பிரியமானவள், அவளையே எனக்குக் கொள்ளவேண்டும் என்ருன்.