பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 மாமல்லன் சிம்சோன் 18 ஆகையால் ஏழாம் நாளிலே பொழுதுபோகுமுன்னே, அந்த ஊர் மாந்தர் அவனை நோக்கி: தேனைப் பார்க்கிலும் மதுரமானது என்ன, சிங்கத்தைப்பார்க்கிலும் பலமானதும் என்ன என்ருர்கள்: அதற்கு அவன்: நீங்கள் என் கிடாரியால் உழாதிருந்தீர்களானல், என் விடுகதையைக் கண்டுபிடிப்ப தில்லை என்ருன். 19 கர்த்தருடைய ஆவி அவன்மேல் இறங்கினதினல், அவன் அசகலோனுக்குப்போய், அவ்வூராரில் முப்பதுபேரைக் கொன்று, அவர்களுடைய வஸ்திரங்களை உரிந்துகொண்டு வந்து, விடுகதையை விடுவித்தவர்களுக்கு அந்த மாற்று வஸ்திரங்களைக் கொடுத்து, கோபம் மூண்டவனுய்ப் புறப் பட்டு, தன் தகப்பன் வீட்டுக்குப் போய்விட்டான். 20 சிம் சோ னி ன் பெண்சாதியோவென்ருல், அவனு டைய தோழரில் அவனேடே சிநேகமாயிருந்த ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாள். 15 அதிகாரம் 1 சிலநாள் சென்றபின்பு, சிம்சோன் கோதுமை அறுக்கிற நாட்களில் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டு, தன் பெண்சாதியைக் காணப்போய்: நான் என் பெண்சாதியி னிடத்தில் அறைவீட்டிற்குள் போகட்டும் என்ருன்; அவள் தகப்பனே, அவனே உள்ளே போக ஒட்டாமல்: 2 நீ அவளை முற்றிலும் பகைத்துவிட்டாய் என்று நான் எண்ணி, அவளை உன் சிநேகிதனுக்குக் கொடுத்துவிட்டேன்; அவள் தங்கை அவளைப் பார்க்கிலும் அழகானவள் அல்லவா, அவளுக்குப் பதிலாக இவள் உனக்கு இருக்கட்டும் என்று சொன்னன். 3 அப்பொழுது சிம்சோன்: நான் பெலிஸ்தருக்குப் பொல்லாப்புச் செய்தாலும், என்மேல் குற்றமில்லை என்று அவர்களுக்குச் சொல்லி, 4. புறப்பட்டுப்போய், முந்நூறு நரிகளைப் பிடித்து, பந்தங்களை எடுத்து, வாலோடே வால் சேர்த்து, இரண்டு