பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழைய ஏற்பாட்டில் உள்ள சிம்சோன் வரலாறு 23 அவன் குடித்தபோது அவன் உயிர் திரும்ப வந்தது: அவன் பிழைத்தான்; ஆனபடியால் அதற்கு எந்நக்கோரி என்று பேரிட்டான்; அது இந்நாள்வரையும் லேகியில் இருக்கிறது. 20 அவன் பெலிஸ்தரின் நாள்களில் இசரவேலை இருபது வருஷம் நியாயம் விசாரித்தான். 16 அதிகாரம் 1. பின்பு சிம்சோன் காசாவுக்குப்போய், அங்கே ஒரு வேசியைக் கண்டு, அவளிடத்தில் போனன். 2 அப்பொழுது: சிம்சோன் இங்கே வந்திருக்கிருன் என்று காசா ஊராருக்குச் சொல்லப்பட்டது. அவர்கள்: காலையில் வெளிச்சமாகிறபோது அவனைக் கொன்றுபோடுவோம் என்று சொல்லி, அவனை வளைந்துகொண்டு இரா முழுதும் அவனுக் காகப் பட்டனவாசலில் பதிவிருந்து இரா முழுதும் பேசா திருந்தார்கள். 3 சிம்சோன் நடுராத்திரிமட்டும் படுத்திருந்து, நடு ராத்திரியில் எழுந்து, பட்டணத்து வாசல் கதவுகளையும் அதின் இரண்டு நிலைகளையும் பிடித்து, தாழ்ப்பாளோடே கூடப் போத்து, தன் தோளின்மேல் வைத்து, எபிரோனுக்கு எதிரேயிருக்கிற ம லை யி ன் உச்சிக்குச் சுமந்துகொண்டு போனன். 4 அதற்குப்பின்பு அவன் சோரேக்கு ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயோடே சிநேகமாயிருந்தான். 5 அவளிடத்திற்குப் பெலிஸ்தரின் அதிபதிகள் போய்: நீ அவனை நயம்பண்ணி, அவனுடைய மகா பலம் எதினலே உண்டாயிருக்கிறது என்றும், நாங்கள் அவனைக் கட்டிச் சிறுமைப்படுத்துகிறதற்கு எதினலே அவனை மேற்கொள்ள லாம் என்றும் அறிந்துகொள்; அப்பொழுது நாங்கள் ஒவ் வொருவரும் ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு உனக்குக் கொடுப்போம் என்ருர்கள். 6 அப்படியே தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: உன் மகா பலம் எதினலே உண்டாயிருக்கிறது, உன்னைச் சிறுமைப்