பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழைய ஏற்பாட்டில் உள்ள சிம்சோன் வரலாறு 25 வேண்டும் என்ருள்; அதற்கு அவன்: நீ என் தலைமயிரின் ஏழு ஜடைகளை நெசவுநூல் பாவோடே பின்னிவிட்டால் ஆகும் என்ருன். 14 அப்படியே அவள் செய்து, அவைகளை ஆணியடித்து மாட்டி: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார் கள் என்ருள்; அவன் நித்திரைவிட்டெழும்பி, நெசவு ஆணியையும் நூல்பாவையும்கூடப் பி டுங் கி க் கொண்டு போனன். 15 அப்பொழுது அவள் அவனைப் பார்த்து: உன் இருதயம் என்ளுேடு இராதிருக்க, உன்னைச் சிநேகிக்கிறேன் என்று நீ எப்படிச் சொல்லுகிருய்? நீ இந்த மூன்றுவிசையும் என்னைப் பரியாசம் பண்ணினய் அல்லவா, உன்னுடைய மகா பலம் எதினலே உண்டாயிருக்கிறது என்று எனக்குச் சொல்லாமற் போனயே என்று சொல்லி, 16 இப்படி அவனைத் தினம் தினம் தன் வார்த்தை களினலே நெருக்கி அலட்டிக்கொண்டிருக்கிறதில்ை, சாகத் தக்கதாய் அவன் ஆத்துமா விசனப்பட்டு, 17 தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப் படுத்தி: சவரகன் கத்தி என் தலையின்மேல் படவில்லை; நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்தது முதல் தேவனுக்கென்று நசரேயனைவன்; என் தலை சிரைக்கப்பட்டால், என் பலம் என்னைவிட்டுப் போம்; அதிஞலே நான் பலட்சயமாகி, மற்ற எலலா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னன். 18 அவன் தன்.இருதயத்தையெல்லாம் தனக்கு வெளிப் படுத்தினதைத் தெலீலாள் கண்டபோது, அவள் பெலிஸ் தரின் அதிபதிகளுக்கு ஆள் அனுப்பி: இந்த ஒருவிசை வாருங் கள், அவன் தன் இருதயத்தையெல்லாம் எனக்கு வெளிப் படுத்தினன் என்று சொல்லச் சொன்னாள்; அப்பொழுது பெலிஸ்தரின் அ தி ப தி க ள் வெள்ளிக்காசுகளைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு அவளிடத்துக்கு வந்தார்கள்.