பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டனின் படைப்புகள் : வரலாற்றுப் பின்னணி ஆ. இரா. வேங்கடாசலபதி மில்ட்டன் வாழ்ந்த காலம் இங்கிலாந்தில் பெரிய தொரு புரட்சி நிகழ்ந்த காலம். 1640இல் இங்கிலாந்துப் புரட்சி வெடித்தபோது அவர்க்கு 32 வயது. இருபதாண்டுப் புரட்சி அரசாங்கத்துக்குப் பிறகு, வீழ்த்தப்பட்ட முடியாட்சி 1660இல் மீ ண் டு ம் அமைக்கப்பட்டபோது அவர்க்கு '2 அகவை. அதற்குப் பிறகு அவர் 14 ஆண்டு வாழ்ந்தார். 'ல்ட்-னின் வாழ்வும் இலக்கியமும் இப் புரட்சியோடு இரண்டறப் பிணைந்துள்ளதால் அவற்றைப் புரிந்துகொள் வதற்கு இங்கிலாந்துப் புரட்சியைப்பற்றிச் சுருக்கமாக வேனும் அறிந்துகொள்ளவேண்டும். பதினேழாம் நூற்ருண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து முதன்மையாக விவசாயப் பொருளாதாரத்தின் அடிப்படை யில் அமைந்த சமூகமாக விளங்கியது. நிலவுடைமைச் சமூக உறவுகளே அதில் நிலவின. 15ஆம் நூற்ருண்டின் பிற்பகுதி யில் சமய மடங்களிடமிருந்து பிடுங்கப்பட்ட பெருமளவு நிலபுலங்கள், அயல்நாடுகளோடுகொண்ட வணிகம், கடற் கொள்ளை, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஆசிய, அமெரிக்க, ஆப்பிரிக்கக் கண்ட நாடுகளிலிருந்து அடித்த கொள்ளை, கரிச்சுரங்கத் தொழிலில் ஏற்பட்ட விரிவாக்கம்-இவற்றின் காரணமாக ஒருவகைத் தொழில்மயமாக்கம் ஏற்படத் தொடங்கியது; பத்தொன்பதாம் நூற்ருண்டின் தொழிற் புரட்சிக்கு முன்னேடியாகவும் இது அமைந்தது. இதன் காரணமாக நி ல த் தி ல் முதலீடு செய்து பெருமளவு ஆதாயத்தை முதலாளிய விவசாயிகள் ஈட்டினர். சந்தைப் பொருளாதாரம் உருவாகி விரிவடைந்தது. வணிகரும்