பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டனின் படைப்புகள்: வரலாற்றுப் பின்னணி 29 தொழில் உற்பத்தியாளரும் வளர்ந்தனர். இவர்களுக்கு எதிர்ப்புறமாக, அதற்கு முன்புவரை பொருளாதார-சமூக மேலாண்மை செலுத்திவந்த நிலக்கிழார்களும் பிரபுக்களும் நின்றனர். நிலக்கிழாருள் தலையான வகை மன்னன் விளங் கினன். முடியாட்சிக்கு ஆதரவாக ஆங்கிலிகத் திருச்சபை நின்றது. இவர்கள் அனைவரும் நிலவுடைமைச் சமூக உற்பத்தியில் ஆதிசகம் செலுத்தி வந்தோராவர். ஆனல் இக் காலகட்டத்திலோ நிலவுடைமை உற்பத்திமுறை காலாவதி ஆகிவிட்டது. அதன் மூலமாகக் கிடைத்த ஆதாயம் உச்சநிலையை எட்டிய பின்னர்த் தேக்கமடைந்து விட்டது. ஆனால், புதிதாக உருவாகிய முதலாளிய வர்க்கத் தினர் முதலாளிய உற்பத்திமுறையின் வள ர் ச் சி யால் பெருஞ் செ ல் வ ம் ஈட்டினர். இங்கிலாந்து நாடாளு மன்றத்தில் இவர்களே பெரும்பான்மையினராகவும் விளங் சினர். இந்நிலையில் இவ்விரு பிரிவினருக்குமிடையே முரண்பாடு கள் முற்றிப் போராட்டம் வெடித்ததில் வியப்பதற்கொன்று மில்லை. முந்தைய நிலவுடைமை அமைப்புக்கு ஆதரவான வர்கள் மன்னனைச் சுற்றி நின்றனர். இவர்கள் வேத்திய லார் (Royalists) என்று அழைக்கப்பட்டனர். மாற்றத்தை விரும்பிய முதலாளிய வர்க்கத்தினர் நாடாளுமன்றத்தைச் சுற்றி நின்றனர். புதியதாக முதலீடு செய்வதற்குரிய செல்வத்தைப் பெற்றிருந்த முதலாளிய வர்க்கத்தினர் அதனைக்கொண்டு வளர்சசி அடைய விரும்பினர். ஆனல், நிலவுடைமைச் சமூகத்துக்காக உண்டாகியிருந்த அரசியலமைப்பும் சட்ட திட்டங்களும் முதலாளிய வளர்ச்சிக்குத் தடையாக நின்றன. மேலும், செலவுகளை ஈடுகட்ட அரசாங்கம் புதிய புதிய வரிகளை விதிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இவ் வரிகளெல்லாம் பெருஞ்செல்வம் ஈட்டிவந்த முதலாளிய வர்க்கத்தினரையே .ெ பரி து ம் பாதித்தன. அரசியல் அதிகாரம் தம் கையில் இல்லாமல் வரிகளை மட்டும் கட்டிக் கொண்டேயிருப்பது அ வ ர் க ளு க் கு உடன்பாடானதாக