பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 @ásão. eräfffff; திேம்ன்றம் மன்னன் பேச்சைக் கேட்க மறுத்தது. முதலாம் சார்லசு மன்னன் நாடாளு மன்றத்தைக் கலைத்து 1629இல் தன் தனியரசாணையைச் செலுத்தலாஞன். ஆனல் ஸ்காட்லாந்துக் கலகத்தைத் தொடர்ந்து மன்னனுக்கு இருந்த கொஞ்சநஞ்ச வலிமையும் போயிற்று. 1640இல் நாடாளுமன்றம் தாகைக் கூடியது. மன்னனைக் கண்டித்தது. 1642இல் வேத்தியலாருக்கும் நாடாளுமன்றத்தினர்க்கும் இடையே முதல் உள்நாட்டுப் போர் நிகழ்ந்தது. ஆலிவர் கிராம்வெல்லின் தலைமையில் புதிய இராணுவத்தை நாடாளுமன்றத்தினர் அமைத்தனர். வெற்றியும் அவர்களுக்கே கிட்டியது. இரண்டாம் உள் நாட்டுப் போரிலும் புதிய இராணுவமே வாகை சூடியது. முதலாம் சார்லசு மன்னன் பிடிபட்டான். வரலாறு அதற்கு முன்னர் கண்டிராதவண்ணம் அவன் பொது விசாரணைக்கு உள்ளானன். அவன் தலை உருண்டது. மன்னனின் தலை யோடு மு. டி யாட் சி யு ம் ஒழிக்கப்பட்டது. பொது அரசமைப்பு (Commonwealth) உண்டாக்கப்பட்டது. அதன் பிறகு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, கிராம்வெல்லைப் பாது காவலராகக்கொண்டு பாதுகாப்பக அரசு (Protectorate) அமைக்கப்பட்டது. הר. צו - ירייה ירי: 驛霹零 முன்னர் குறிப்பிட்டவாறு ஆங்கிலிகத் திருச்சபை மன்னனே ஆதரித்தது. அரசியலில் நாடாளுமன்றத்தினரை ஆதரித்தோர், சமயத்துறையில் தூநெறியினராக (Puritans) விளங்கினர். ஆங்கிலிகத் திருச்சபையின் இழிவுகளையும் ஊழல்களேயும் க ண் டி. த் து, அவ்வமைப்பு கிறித்துவத் துக்கே எ தி ரா ன து என்றும் வாதாடினர். ஆயர், புரோகிதர் எ ன் ற படிநிலையைக் கொண்ட பேராயம் (Episcopacy) என்ற திருச்சபை அமைப்பை 1643இல் நாடாளுமன்றம் ஒழித்தது. மன்னனுக்கு உறுதுணையாக விளங்கிய லாடு என்ற பேராயர்க்கும் மரண தண்டனை நிறை வேற்றப்பட்டது. நாடாளுமன்றம் முதலாளியத்துக்குச் சார்பான அமைப் பாக இருந்தபோதும், நிலவுடைமையத்துக்கு எதிரான