பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டனின் படைப்புகள்: வரலாற்றுப் பின்னணி 31 தனது போராட்டத்துக்குப் பர ந் து ப ட் ட மக்களின் ஆதரவை நாடியது. இக் குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத் தில் முற்போக்கான வ ர லா ற் று ப் பங்கையாற்றி, படு பிற்போக்கான நிலவுடைமையத்தை அது எதிர்த்து வந்த தால் சமப்படுத்துவோர் (Levellers), தோண்டுவோர் (Diggers), ஒதுவோர் (Raபters), ஐந்தாம் முடியாட்சியினர் (Fifth Monarchists) op gevrrøðr apbGurr šguli 19ña Georíř நாடாளுமன்றத்தினர்க்குக் கைகொடுத்தனர் . இங்கிலாந்து எங்கும் புரட்சிப்புனல் பெருக்கெடுத்தோடியது. புதிய புதிய கருத்துகள் மலர்ந்தன. மேலும் அதிகமான நில உரிமை கள், குடியுரிமைகள், குடியாட்சி உரிமைகள் , சமய உரிமை கள் ஆகியவற்றை மேற்குறித்த பிரிவினர் கோரினர். இது தமக்கு எதிராகப் போவதைக் கண்ட நாடாளுமன்றத்தினர் இவர்களை வன்முறைகொண்டு ஒடுக்கினர். புது இராணு வத்தில் பெரும்பங்கு வகித்த சமப்படுத்துவோர் கிளர்ந் தெழுந்தபோது அ வ ர் க ளு ம் ஒடுக்கப்பட்டனர். முழு விடுதலை கிடைத்துவிட்டது என்ற நம்பிக்கையில் தோண்டு வோர் ஏற்படுத்திய விவசாயக் கூட்டுடைமைச் சமூகங்களும் கலைக்கப்பட்டன. இவ்வாறு குடியரசு மலர்வதற்கு ஏற் பட்ட முன்முயற்சிகள் முளையிலேயே நசுக்கப்பட்டன. குடி யாட்சி உரிமைகள் பரந்துபட்ட மக்களுக்குப் பரவலாகச் சென்று சேர்வது தமக்கே ஆபத்தாக முடியும் என்று அஞ்சிய நாடாளுமன்றத்தினர் மன்னனோடு சமரசம் செய்ய முயன்ற னர். அவர்களுக்குள்ளே பதவிவேட்கையும், அதிகார வெறி யும், பேராசையும் மிகுந்தன. இறுதியில் 1660ஆம் ஆண்டில் இரண்டாம் சார்லசு மன்னனோடு சமரசம் ஏற்பட்டது. அவனுக்கு முடிசூட்டப் பட்டதெனினும் முன்பு அரசனுக்கு இருந்த அதிகாரமும் மதிப்பும் பெருமளவு குறைந்தன. நாடாளுமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டே அவன் செயலாற்ற வேண்டிய வளுன்ை. இவ்வாறு 1640இன் இங்கிலாந்துப் புரட்சி பாதியோடு நின்றது. நிலவுடைமையம் ஒழிக்கப்பட்டது; முடியாட்சிக்