பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 8 மாமல்லன் சிம்சோன் அரசமைப்பிலுள்ள பிளவுகள் தொடர்பாக நண்பரொரு வர்க்குக் கடிதம்’ என்ருெரு துண்டு வெளியீட்டை எழுதினர். எப்பாடுபட்டேனும் முடியாட்சி திரும்புவதைத் தடுத்தே தீரவேண்டும் என்ற வேட்கை இதில் புலப்படுகிறது. மன்னராட்சி திரும்புவதற்குரிய அறிகுறிகள் தென்படத் தொடங்கியபோது முன்னுள் புரட்சியாளர்களும், அரசக் கொலையை ஆதரித்தோரும் தம் பழைய பாவங்களுக்குக் "கழுவாய் தேடுவதற்காக வெட்கக்கேடான வேலைகளில் இறங்கிக்கொண்டிருந்தனர். இந்தச் சூழலிலும்கூட மில்ட்டன் மனவுறுதியோடு நின்ருர். இரண்டாம் சார்லசு மீள்வதற்குச் சிறிதுகாலத்துக்குமுன்புகூட ‘சுதந்தரப் பொது அரசமைப்பை ஏற்படுத்துவதற்கு எளிய வழி என்ருெரு நூலைத் துணிவோடு வெளியிட்டார். 1660இல் மன்னராட்சியின் மீட்சியோடு புரட்சியின் தோல்வி முழுமைபெற்றது. உடைந்த படிவம் மீண்டும் உருப்பெற்றது. பழைய பகைவர்கள் வேட்டையாடப் பட்டனர். மில்ட்டனின் தோழர்கள் பலர் கைதாயினர்; துரக்கிலிடப்பட்டனர். மில்ட்டனும் கைதாஞர். எனினும், அவருடைய தலை தப்பியது தம்பிரான் புண்ணியத்தாலா என்று தெரியவில்லை. ஆனல் மில்ட்டன் எழுதிய படிவத்தை உடைப்போன்", "இங்கிலாந்து மக்களுக்கு ஆதரவாக” என்ற நூல்கள் அம்பலத்தில் எரிக்கப்பட்டன. மீட்சிக்குப் பிறகு 14 ஆண்டுக்காலம் மில்ட்டன் வாழ்ந் தார். இறைவனின் இலட்சியம் என்று தாம் கொண்ட கனவு கலைந்ததை மில்ட்டன் கண்டார். தோல்வியால் ஏற்படும் கைப்புணர்வை முழுதுமாய் உணர்ந்தார். இதன் வெளிப் பாடே அவருடைய முப்பெரும் பாடல்களான சுவர்க்க நீக்கம்', 'சுவர்க்க மீட்பு, மாமல்லன் சிம்சோன். இது காறும் ஆராய்ந்த ஆன்ற அறிஞர் பலரும் ‘வேதாந்தமாக விரித்துப் பொருளுரைத்தனரேயன்றி இவற்றின் அரசியல் உள்ளடக்கத்தை வெளிப்படுத்தவில்லை. வ ர லா ற் று ப் பின்னணியில் இவற்றைப் புதுவதாகப் பார்த்துப் பொருளு ரைத்த பெருமை, சென்ற ஐம்பதாண்டுக்கும் மேலாகப்