பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டனின் படைப்புகள்: வரலாற்றுப் பின்னணி 39 பதினேழாம் நூற்ருண்டைப் பற்றியே ஆ ய் ந் து வ ரு ம் பேராசிரியர் கிறித்தபர் இல் அவர்களையே சாரும். இங்கிலாந்துப் புரட்சியை இ ைற வ னி ன் இலட்சிய மாகவே மில்ட்டனும், அவரைச் சார்ந்தோரும், முற்போக் காளரும் கண்டனர்; ஆங்கிலேய மக்களை இறைவனல் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாகப் பார்த்தனர். ஆனல் அம் மக்களின் போராட்டம் தோல்வியடைந்தது; புரட்சியும் வீழ்ந்தது. இறைவனின் ஆணை தோல்வியடைய இயலுமா? ஆமெனில் இறைவன் கொடியவன் என மில்ட்டனின் காலத்தவர் பலர் எண்ணினர். ஆனல் மில்ட்டனின் மனத்தில் இவ்வெண்ணம் ஒரு நொடிகூட நிழலாடவில்லை. மில்ட்டன் அ வ் வாறு எண்ணியிருந்தால் அவருடைய வாழ்க்கை பொருளிழந்து, பொலிவிழந்து நின்றிருக்கும். அவருடைய வாழ்க்கை அமைப்பு பெலித்தியரின் கோயிலைப் போல் நொறுங்கி வீழ்ந்திருக்கும். ஆனல் இங்கிலாந்துப் புரட்சி தோல்வியடைந்தது கண்கூடாகக் கண்ட காட்சி. எனவே அதுவும் இ ைற வ னி ன் செயலே. ஆகவே, 'இறைவனின் செயல்களை மானுடர்க்கு விளக்கிக்காட்ட, மில்ட்டன் முயன்ருர். அதன் மூலமாகத் தம் வாழ்க்கை யைத் தாமே விளங்கிக்கொள்ள முயன்ருர். இதன் விளைவு தான் 'சுவர்க்க நீக்கம்’ எனும் மாகாவியம். இங்கிலாந்துப் புரட்சி இறைவனின் ஆணை. ஆயின் அது தோல்வியடைந்தது. காரணம் யார்? மனிதரே. (முதற் பாவத்தின் விளைவான) வீழ் ச் சியே இதற்குக் காரணம். புரட்சியின் தோல்விக்கும் (வேறு பல தீமைக்கும்) வீழ்ச்சியே காரணம். ஆதாம் வீழாமல் இருந்திருந்தால் மனிதர் சமத்துவத்தோடு வாழ்ந்திருப்பர். உடைமை அனைத்தும் பொதுவாக இருந்திருக்கும். உடைமையில் நிலவிய ஏற்றத் தாழ்வுகளைக் காக்கக் கொடுங்கோல் அரசு தேவைப்பட் டிருக்காது. உடைமையும் கூட ஆணவம், ஆசை ஆகிய வற்றின் விளைவே. காலந்தோறும் ஒடுக்கப்பட்டுவந்த மக்க ளின் துயரை வீழ்ச்சிக் கோட்பாடு உணர்த்தி நிற்கிறது. முன்னெரு நாள் பொற்காலம் இருந்தது. இன்று அது