பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டனின் படைப்புகள்: வரலாற்றுப் பின்னணி 41 பார்வையை இழக்கின்றனர்; தம் பகைவரால் எள்ளி நகையாடப்படுகின்றனர். மாமல்லன் சிம்சோனின் ஒவ் வொரு வரியையும் இங்கிலாந்துப் புரட்சியோடும் மில்ட்ட னின் வாழ்க்கையோடும் பொருத்திப் பார்க்கலாம். இசுர வேலரைப் போலவே இங்கிலாந்தின் மக்களும் இறைவனல் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களே. இசுரவேலரை விடுவிக்க வந்த சிம்சோன் ஆசையூட்டலுக்கு மயங்கிக் கண்ணிழக் கிருன். ஆனல் அப்போதும் விடுதலை சாத்தியமே. மனிதன் விருப்பப்பட்டபோதன்றி இ ைற வ ன் நினைக்கும்போதே விடுதலை கிட்டும். மானுடன் அதுவரை தின்னல் இயன்ற தைச் செய்யவேண்டும் தோல் வி அடைந்தோர்க்கு அழைப்பு விடுக்கும் நம் பி க் கை க் கு ர ல் 'மாமல்லன் சிம்சோன்’ தோல்வியில் துவண்டு புலம்பலிலும் அழுகையிலும் மில்ட்டன் உழலவில்லை. தோல்விக்கான காரணத்தைத் தேடிச் சென்ருர். இறைவனின் இலட்சியம் வெற்றிபெறுவ தற்கு என்ன செய்யவேண்டும் என்று ஆழமாக எண்ணிஞர். இதன் விளைவே முப்பெரும் பாடல்கள். ஆணும் பெண் னும் ஆசையூட்டலுக்கு மயங்கி, வீழ்ந்து சுவர்க்கத்தை இழக்கின்றனர். முழு மாந்தன் ஆசையூட்டலை வென்றடக்கிய தால் க வர் க் கம் மீட்கப்பட்டது. வீழ்ந்த மனிதன் ஆசையூட்டலை மறுமுறை வென்றதால் மீண்டும் எழுகிருன். தாம் கொண்ட கொள்கை தோல்வியடைந்ததைக் கண்ட பிறகும் அடிபணியாத உறுதியை மில்ட்டனிடம் காண்கிருேம். இதுதான் அவருடைய உயிர்நாடி. அதனல் தான் முந்நூருண்டு கழித்தும் அவருடைய படைப்புகளைப் படிக்க முடிகின்றது, பயன்பெற முடிகின்றது. மில்ட்டனின் இலக்கியப் படைப்புகள் நின்று நிலவும்-வாக்களிக்கப்பட்ட பொற்காலம் வரும்வரை.