பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை உலகப் பெருங் கவிஞர் மில்ட்டன் படைத்துள்ள சிம்சோன் பற்றிய காவியம் பயில்தொறும் இலக்கிய-இறை யியல் எழுச்சிநிலைகளை ஏற்படுத்தவல்லது. கிறிஸ்தவத் திருமறையாகிய விவிலிய நூலில் அடங்கும் கதை நிகழ்ச்சி கள் அத்தனையும் மணியானவை. அவற்றின் முதற் சூழலில் மட்டுமின்றி, வாசிப்போரின் வாழ்க்கை, சமுதாய அமைப்பு ஆகிய பின்னணிகளோடும் ஊன்றிப் பார்த்திட முயன்றவர் கள் இலக்கியச் செல்வங்களைப் படைத்து உலகிற்கு வழங்கி யுள்ளார்கள். அத் த கு சிறப்புடையதாகத் திகழ்கிறது மில்ட்டனின் காவியம். ஏமாற்றங்கள், தோல்விகள் ஆகிய வற்ருேடு பார்வை இழப்பையும் அடைந்த அப்பெருங்கவிஞர் சிம்சோனின் நிலையில் தம்மைக் காண முற்படுகின்ருர். என் பார்வையின்மை, என் விலங்கைவிட, இவ் இருட் குகையை விட, வறுமையைவிடக் கொடியது. கடவுளின் முதற் படைப் பாம் ஒளியினை என்னல் நுகரமுடியாது. என்னைச் சற்று மகிழ் விக்கும் மற்றெல்லாம் இப் பேரிழப்பால் நிலையாய் மறைக்கப் பட்டிருக்கின்றன (பக். 47). சிம்சோனை அவன் தந்தை மனோவாவும், காதலி தெவீ லாளும் சந்தித்திருந்தால் எத்தகு உரையாடல்கள் எழுந் திருக்க முடியும் என்பதைத் தம்முடைய சொந்த வாழ்க் கைப் பின்னணியோடு எண்ணிப் பார்க்கிருர் கவிஞர். படிப் போருக்கு தெலீலாள்மீது இரக்கம் ஏற்படத் தோன்றும் வகையில் அவளுடைய பேச்சு அமையவே செய்கின்றது. "உங்கள் உடல் வலிமை உங்களிடமிருந்து எடுக்கப்பட்டு விட்டால், மறச் செயல்களை நோக்கி வெளியே செல்ல மாட்டீர்கள் என்று எண்ணினேன். உங்கள் அன்பை அதன் iii