பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் 47 அறிவு இல்லா வீரம் எவ்வளவுதான் சிறப்புடையதாக இருந் தாலும், அது அவனுக்கு ஒரு சுமையே. இப்படிப்பட்ட மெய்யறிவு இல்லா வீரம்கொண்டோன் ஆள்வதற்கில்லை, அறிவுமிக்கவல்ை ஆளப்படவே பிறக்கிருன். வல்லோன் எனக்கு வலிமை தந்தான். ஆனல் அதை நீ எளிதில் இழப்பாய்’ எனக் காட்டவே, அதை என் குடுமி யில் மறைத்துவைத்தான் போலும். நான் அமைதிபெற வேண்டும். படைத்தவனே நான் குறைகாணக் கூடாது. ஒரு வேளை அவனின் நோக்கம் என் அறிவுக்கு அப்பாற்பட்டிருக்க லாம். என் ஆற்றலே என் சாவிப்பு என நான் அறிந்தால் போதும். என் எல்லாத் துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் அதுவே காரணம். என் துன்பங்கள் எண்ணற்றன. அழுது தீர்க்க வாழ்நாள் போதாது. பார்வை இழப்பே என் துன்பங் களுள் பெரியது. நான் ஒரு குருடன்; எதிரிகளின் கைதி. என் பார்வையின்மை, என் விலங்கைவிட, இவ் இருட் குகையைவிட, வறுமையைவிடக் கொடியது. கடவுளின் முதற் படைப்பாம் ஒளியினை என்னல் நுகர முடியாது. என்னைச் சற்று மகிழ்விக்கும் மற்றெல்லாம் இப் பேரிழப்பால் நிலையாய் மறைக்கப்பட்டிருக்கின்றன. பார்வையற்ற இந்நிலையில் நான் புழுவினும் கடையன னேன். ஏனெனில் அவை ஊர்ந்து சென்ருலும் ஒளியினைக் காணவும், களிக்கவும் அவற்றுக்குக் கண்களுண்டு. ஆளுல் நானே நடக்கிறேன். பார்க்க முடியவில்லை. எனவே நான் இரக்கத்திற்குரியவன். ஒளியின் இடையில் நான் இருளைக் காண்கிறேன். வெறுப்புக்கும் கொடுஞ் சொற்களுக்கும், ஏமாற்றத்திற்கும் இழிவுக்கும் ஆளாக்கப்பட்டிருக்கிறேன். உள்ளேயும், வெளியேயும் பிறர் தயவால் வாழ்கிறேன். வலிமையிருந்தும் செ ய ல் பட முடியவில்லை. செத்துப் பிழைத்துக்கொண்டிருக்கிறேன். இருளே! நீ என்னை எப் பக்கத்திலும் சூழ்ந்துள்ளாய். நண்பகல்கூட எனக்கு நள்ளிர வாய்க் காணப்படுகிறது. இவ் இருட் குகையினின்று எனக்கு மீட்பே இல்லை. மீண்டும் ஒளியினைக் காணும் நம்பிக்கை யில்லை. என்னைக் காரிருள் சூழ்ந்துள்ளது. முதல்வனின்