பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மாமல்லன் சிம்சோன் முதற் படைப்பாம் ஒளி எனக்கு வஞ்சிக்கப்பட்டதேன்? உலகுக்கு ஒளி தராமல் இருட் குகையில் மறைந்துகொண்ட நிலவுபோல், செங்கதிர் எனக்கு இருண்டுவிட்டது. வாழ் விற்கு ஒளி தேவையென்பதாலும், ஒளியே வாழ்வானதா லும், தொடுவுணர்வுபோல் ஒளியுணர்வை மேனியெல்லாம் அமைக்காமல், எப்போதும் இடரை அணு கி நிற்கும் மென்மைமிகு கண்களில் அமைத்ததேனே? அப்படி மேனி யெல்லாம் அமைத்திருந்தால் உடலின் ஒவ்வொரு நுண்துளை வழியாய் மனிதன் தன் விருப்பம்போல் காண இயலுமே. அப்படி அமைத்திருந்தால், நான் பார்வையிழந்து இருளில் தவிக்கவேண்டியதிருக்காதே. எனது இந்த சிறப்பு வாழ்வில், என்ன நானே, என்னுள் புதைத்துக்கொண்டேன். நான் ஓர் உலவிடும் கல்லறை. கல்லறையில் புதைக்கப்பட்ட பிணம், தொல்லைகளி லிருந்து விடுதலையடைகிறது. நானே இழிவிலிருந்தும், தீமைகளிலிருந்தும், வெறுப்பிலிருந்தும் வி ல க் க ப் பட வில்லையே. இறப்பு விதிகளின்படி, மூடப்பட்ட கல்லறைகள் மீண்டும் தோண்டப்படுவதோ, புதைக்கப்பட்ட பிணம் தொல்லைக்குட்படுத்தப்படுவதோ இல்லை. மாடுக நடமாடும் கல்லறையாய் வாழ்கின்ற நான் தண்டனையை நுகரவும், ஒறையிருக்கவும் வேண்டியவய்ை இருக்கிறேன். பண்பில்லாக் கொடியவர்களிடையே என் சிறையிருப்பு எனக்கு அளறு. போலுள்ளது. யாரங்கே வருவது? யாரோ என்ன நோக்கி வரும் காலடி ஓசை கேட்கிறேன். ஒருவேளை என் இன்னல் கண்டு எள்ளி, நகைக்கவரும் பகைவர் கூட்ட மோ? என்னைத் துன்புறுத்துவது அவர்களின் அன்ருட வழக்கமாயிற்றே. குழு ஆள்: இவன், ஆம், இவன்தான் சிம்சோன். மெது வாகச் செல்லுங்கள். தொந்தரவு .ெ ச ய் யா தீ ர்! ஆ! எத்தனப் பெரிய மாற்றம். சொல்லும் தரமன்று. எண்ணிக் கூடப் பார்க்கமுடியாத மாற்றம். இதோ! விழிப்பின்றி அலங்கோலமாய்த் தொங்கிய தலையுடன் வீழ்ந்துகிடப்பதைப் பாருங்கள். நண்பர்களால் கைவிடப்பட்டு, நம்பிக்கையிழந்து கிடப்பதைக் காணுங்கள். பொருந்தாத அழுக்கடைந்த,