பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் கந்தலான, அடிமைக்குரிய ஆடையோடு காணப்படுகிருன். ஒருவேளை, என் கண்களே என்னை ஏமாற்றுகின்றனவோ. இவன் சிம்சோன்தாளு? உடல் வலிமையாலும், மறச்செயல் களாலும் புகழ்பெற்ற சிம்சோன இவன்? தன்னைக் காத்துக்கொள்ளப் படை ஏதுமின்றி நிற்கும் போதுகூட, எவராலும் அவனே வெல்லமுடியுமா? கொடிய விலங்காலும்கூட அவனே எதிர்கொள்ள முடியாதே. அரிமா ஆட்டுககுட்டியைக் கிழித்துப்போடுவதுபோல், படைக்கலன் ஏதுமின்றி, அரிமாவைக்கொன்ற சிம்சோன இவன்? படைக் கலன்கள் எவையுமின்றிப் பகைவர் படையை நிலைகுலையச் செப்த சிம்சோனு இவன்? எதிராளியின் படைக்கலன்களை எள்ளி நகைப்பதுபோல் வேலோடும், வாளோடும், நெஞ்சக் கூட்டோடும் கம்மியர்களால் உருவாக்கப்பட்ட உருக்குக் கருவிகளோடும், ஊடுருவ முடியாத கலைப் பணிகளோடும் வந்த பகைவர்களைக் கொன்றுகுவித்துத் தடையின்றி முன் னேறிய அந்த சிம்சோனு இவன்? வேங்கையெனச் சிறிப் பாயும் அவன் தாக்குதல் கண்டு அசுகலான் மன்னன் தன் வீரர்களோடு போர்முகம் விட்டுப் புறமுதுகிட்டு ஓடினன். ஒடியவர்களை அவன் உற்று நோக்கையில் அவன் காலடியில் சிக்கி மடிந்தனரே. அவனே எதிர்த்துப் போரிட்டோர் தங்கள் தலைமுடி. புழுதியில் புரள நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து மண்டியிட்டனரே. செத்த கழுதையின் தாடை எலும்பால் ஆயி ர ம் பெலித்தியர்களைக் கொன்ருன். இராமாத்து லேகியிலே அது, இன்றுவரை ஏத்தப்படுகிறது. காசாவிலே மாபெரிய துழைவாயிற் கதவுகளேப் பெயர்த்துத் தன் வெற்றுத் தோளில் வைத்துக்கொண்டு அரக்கர்கள் வாழும் எபிரோன் மலைக்குச் சுமந்துசென்ற சிம்சோனு இவன்? இரும்புக் கதவுகளைத் தோளில் சுமந்தவண்ணம் ஒய்வு நாளிலே அவன் மேற்கொண்ட பயணம் எளிதானது அல்லவே. அது உலகையே தன் தோளில் சுமந்து நின்றதாகக் கருதப்படும் அட்லசின் வலிமையைவிட உயர்வாகும். உனது பார்வையின்மைக்காகவும் அடிமை நிலைக்காகவும் வருந்துகிறேன். உன் அடிமை நிலையில் பார்வையின்மை,