பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மாமல்லன் சிம்சோன் சிறைக்குள் மற்ருெரு சிறைபோல் அன்ருே அமைந்துள்ளது. இருட்குகையினுள் மற்ருெரு இருட்குகை போன்றது. இவ் விருளிலிருந்து உனக்கு விடுதலையேயில்லை. சிம்சோனே! நீயே ஒர் இருட்குகையாளுய். இச் சிறைவாசம் எல்லாவற்றிலும் கொடியதே. உன் உயிர் உண்மையிலேயே உன் உடம்பில் சிறைபட்டிருக்கிறது. உயிர் உடலில் சிறைபட்டிருப்பதாகப் பார்வையுள்ளவர்களும் குறைபட்டுக்கொள்வார்கள். அவர் கள் அ ப் ப டி. க் குைறபட்டுக்கொள்வது முறையில்லை. ஏனெனில் அவர்களால் பார்க்க முடியும். சிம்சோனே அது உன்னல் முடியாதே! இருண்டுபோன அவன் உடம்பில் அவன் உயிர் வாழ்கிறது. உள்ளொளிக்கு எதிரான புறவொளியை அவளுல் இனி நுகர இயலாது. இருண்ட இரவோடு அது பிணைக்கப்பட்டிருக்கிறது. உ ள் .ெ ளா ளி யா ல் புறக்காட்சி இல்லையே. * சிம்சோன் அன்று ஒரு கண்ணுடியாய் விளங்கினன். ஆனல் அவனின் இன்றைய நிலையோ, மாந்தன் மண்ணில் தோன்றிய நாள்முதல் அவன் நிலை மாற்றத்திற்குரியது என் பதற்குத்தக்க சான்ருய் விளங்குகிறது. சிம்சோனின் வீழ்ச்சி நிலவுலகப் பெருமையின் நிலையற்ற தன்மைக்குச் சான்ருகும். மாந்தருள் வலியோய்ை, வல்லோய்ை விளங்கிய சிம்சோன் தற்போது தன் தீங்கு நாளில் வீழ்ந்துகிடக்கிருன். உயர் குடிப் பிறப்பாலோ, செல்வச் செழிப்பாலோ, ஊழாலோ நிலையில் உயர்ந்தவர்கள், எனது கணிப்பில் உயர்ந்தவர்கள் அல்லர். ஆனல் சிம்சோளு எனது கணிப்பில் உயர்ந்து காணப் படுகிருள். ஏனெனில் அவன் உடல் வலிமை நல்லியல்புக ளோடு இணைந்து நிற்கும்வரை அவன் உலகளாவிய புகழ் எய்தினன். பண்டோடுகூடிய வலிமையால் பாரையே பணிய வைத்தான். சிம்சோன்: யாரோ பேசுவதைக் கேட்கிறேன். ஆளுல் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனெனில் அது என் காது களில் விழுமுன்னே காற்ருல் சிதைந்துவிடுகின்றது. குழு ஆள்: சிம்சோன் பேசுகிருன். நாம் அவன் அருகில் சென்று, என்ன சொல்கிருன் என்பதைக் கேட்போம். ஒரு